பங்களாதேஷை தெறிக்கவிட்ட ரில்லி ரோஸோவ்

பங்களாதேஷை தெறிக்கவிட்ட ரில்லி ரோஸோவ்
rossoul sa

ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் இன்று காலை தொடங்கிய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவும் பங்களாதேஷ் அணியும் மோதின.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக டெம்பா பவுமாவும், க்வின்டன் டி காக்கும் களமிறங்கினர்.

பங்களாதேஷ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான டஸ்கின் அஹ்மத் ஆட்டத்தின் முதல் ஓவரை வீசினார். இந்நிலையில் சற்றும் எதிர்பாராத நிலையில் முதல் ஓவரிலேயே 2 ரன்கள் எடுத்த நிலையில் டெம்பா பவுமா நூருல் ஹாசனிடம் கேட்ச் கொடுத்த நிலையில் வெளியேறினார்.

தென்னாப்பிரிக்கா அணியின் முதல் விக்கெட்டை முதல் ஓவரிலேயே வீழ்த்தியதால் சந்தோஷத்தில் திளைத்த பங்களாதேஷ் அணிக்கு அந்த சந்தோஷம் வெகுநேரம் நீடிக்கவும் இல்லை.

டெம்பா பவுமா ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து க்வின்டன் டி காக்குடன் ஜோடி சேர்ந்தார் ரில்லி ரோஸோவ். அடுத்து ஆரம்பித்தது அதிரடி ஆட்டம். ஃபோர், சிக்ஸ் என இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சாளர்கள் இந்த ஜோடியை பிரிக்க வெகுநேரமாக போராடி வந்தனர்.

இந்நிலையில் அணியின் ஸ்கோர் 170ஆக இருந்தபோது தென்னாப்பிரிக்காவின் அடுத்த விக்கெட் விழுந்தது. க்வின்ட்டன் டி காக் 38 பந்துகளில் 63 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 7 ரன்களுடனும், ரில்லி ரோஸோவ், எய்டன் மார்க்ரம் விக்கெட்களும் விழ இறுதியில் தென்னாப்பிரிக்கா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. அணியின் அதிகபட்ச ஸ்கோராக ரில்லி ரோஸோவ் 56 பந்துகளில் 103 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸ்களும் அடங்கும்.

அடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்குடன் களமிறங்கியது பங்களாதேஷ் அணி.

south african team
south african teamsouth african team

தொடக்க ஆட்டக்காரர்களாக நஜ்முல் ஹொசைன் சான்டோ, சவும்யா சர்கார் இறங்கினர். ஆரம்பமே அடித்து விளையாட நினைத்த சவும்யா சர்கார் 6 பந்துகளில் 2 சிக்சர்களுடன் 15 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து நஜ்முல் ஹொசைன் சான்டோ 9 ரன்களுடனும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களிலும் ஆட்டமிழந்து வந்தனர்.

இதில் பங்களாதேஷ் அணியில் அதிக பட்ச ஸ்கோராக லிட்டன் தாஸ் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் பங்களாதேஷ் அணி 16.3 ஓவர்களில் 101 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க, தென்னாப்பிரிக்கா 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிரடியாக விளையாடி அசத்திய ரில்லி ரோஸோவ் இப்போட்டியின் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com