இந்தியா - வங்காளதேசம்  அணிகள் பலப்பரீட்சை - நவம்பர் 2, 2022

இந்தியா - வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை - நவம்பர் 2, 2022

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை போட்டியில் நாளை வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.

இதுவரை மூன்று ஆட்டங்களில், இரண்டு போட்டியில் வென்று நான்கு புள்ளிகளைப் பெற்றுள்ளது இந்திய அணி. சூப்பர்-12 சுற்றின் முதல் இரண்டு ஆட்டங்களில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை வீழ்த்திய இந்திய அணி, மூன்றாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம், பெர்த்தில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

மென் இன் ப்ளூவுக்கு நிச்சயமாக சில சிக்கல்கள் உள்ளன. பவர்பிளேயை அவர்கள் சரிவர பயன்படுத்த இயலாமை என்பது முதன்மையான பிரச்சனை. டி20 உலகக் கோப்பையில் மூன்று இன்னிங்ஸ்களில் வெறும் 22 ரன்கள் மட்டுமே எடுத்ததால் கே.எல்.ராகுலின் ஃபார்ம் சற்று கவலையளிக்கிறது. ரோஹித் சர்மாவும் சிறந்த ஃபார்மில் இருப்பதாக தெரியவில்லை. 

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் சிறப்பாக விளையாட தவறிய நிலையில், நாளை அடிலெய்டில் வங்காளதேசத்தை எதிர்கொள்ளும் இந்திய அணியின் பேட்டிங் ஸ்ட்ராட்டஜி அதிகம் கவனத்தை ஈர்க்கிறது.

இந்திய அணி தனது குறைகளை நிவர்த்தி செய்துகொண்டு சிறப்பாக ஓர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .

mithali raj

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நிச்சயம் இடம்பெறும் - முன்னாள் பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ் நம்பிக்கை

இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ்  'மென் இன் ப்ளூ' (men in blue) , நியூசிலாந்துடன் இணைந்து டி20 உலகக் கோப்பை 2022 இறுதிச்சுற்றில் விளையாடுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

புரோட்டியாஸ் (proteas) இதுவரை  சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொண்ட மிதாலி, அவர்களும் , இந்திய அணியும் குரூப் 2 -லிருந்து அரையிறுதிக்கு முன்னேறுவார்கள் என்று நினைக்கிறார். குரூப் 1-லிருந்து, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியா அணிகளில் ஏதேனும் ஒன்று தகுதி பெறும் என்றும் அவர் கருதுகிறார்.

மிதாலி தனது அரையிறுதி மற்றும் இறுதித் தேர்வுகளைப் பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் பேசுகையில்,

“அரையிறுதி இடங்களுக்கான எனது கணிப்புகள், அதாவது நான்கு இடங்கள், குரூப் 2 விலிருந்து இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இருக்கும். குரூப் 1 இல், முதலில் நியூசிலாந்து அணி அரையிறுதியில் இடம்பெறும். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையில் ஓர் அணி  இடம்பெறும். இந்தியாவும், நியூசிலாந்தும் இறுதிச்சுற்றில் சந்தேகத்துக்கு இடமின்றி இடம்பெறுவார்கள்.” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com