ராஜஸ்தான் கையில் மும்பை மற்றும் பெங்களூரு அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு! எப்படின்னு தெரியுமா?

ராஜஸ்தான் கையில் மும்பை மற்றும் பெங்களூரு அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு! எப்படின்னு தெரியுமா?

ஐபிஎல் 2023 16வது சீசன் தொடரின் 66வது போட்டியில் இன்று பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன.

இப்போட்டியானது தரம்சாலா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

பஞ்சாப் அணி இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி பெற்று, 12 புள்ளிகளுடன் 8வது இடத்திலும், ராஜஸ்தான் அணி 13 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 6வது இடத்திலும் இருக்கிறது.

அதன்படி, இந்த போட்டியில் ஜெயிக்கும் ஒரு அணிக்கு பிளே ஆஃப் சுற்றில் 4வது இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பும் உள்ளது.

அதாவது, ஏற்கெனவே பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் தலா 13 போட்டிகளில் விளையாடி, 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் 4வது மற்றும் 5வது இடத்தில் இருக்கிறது.

இந்நிலையில், பெங்களூரு அணி குஜராத் அணியிடமும், மும்பை அணி ஹைதராபாத் அணியிடமும் தோல்வியடைந்து, ராஜஸ்தான் அணி இன்றைய போட்டியில் அதிக ரன் ரேட் விகிதத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தும் பட்சத்தில் நெட் ரன் ரேட் அடிப்படையில் பெங்களூரு, மும்பை அணியை பின்னுக்குத் தள்ளி, ராஜஸ்தான் அணி 4வது இடத்திற்குச் செல்லவும் வாய்ப்புள்ளது.

அதனால் இன்றைய போட்டி ராஜஸ்தான் அணிக்கு மிக முக்கிய போட்டியாக பார்க்கப்படும் நிலையில், ஆட்டம் விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com