திருச்சியில் தேசிய அளவிலான குத்துச்சண்டை இறுதிப் போட்டி!

திருச்சியில் தேசிய அளவிலான குத்துச்சண்டை இறுதிப் போட்டி!

திருச்சியில் தேசிய அளவிலான குத்துச்சண்டை இறுதிப் போட்டியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்!

தேசிய அளவிலான அகில இந்திய தொழில் முறை குத்துச்சண்டை இறுதிப் போட்டி திருச்சி தேசியக் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.இந்த குத்துச்சண்டை போட்டியில் தமிழ்நாடு, கேரளா, டெல்லி, பஞ்சாப், கர்நாடகா, ஹரியானா, குஜராத் போன்ற 12 மாநிலங்களைச் சேர்ந்த 36 வீரர்கள் வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றனர்.

இந்தப் போட்டியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர், குத்துச்சண்டை போட்டி உலக அளவில் முக்கிய விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாக உள்ளது. முன்பு குத்துச்சண்டை போட்டி நேர வரையறை இல்லாமல், போட்டியிடுபவர்களில் ஒருவர் மயக்கம் அடைந்து கீழே விழும் வரை நடைபெறும். நடுவர்களே கலைத்து விடுவர். அப்படி வரையறை இல்லாமல் நடைபெற்ற காலமும் உண்டு.

தற்போது பல்வேறு வகையான வழிமுறைகள், நெறிமுறைகள் வகுக்கப்பட்டு குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொடக்கப் போட்டிகள் நடத்தப்பட்டு இறுதி போட்டியை தமிழ்நாட்டில் திருச்சியில் நடந்த தேர்வு செய்ததற்கு அகில இந்திய தொழில் முறை குத்துச்சண்டை கழகத்திற்கு நன்றி.

தமிழ்நாடு முதல்வரும், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் விளையாட்டு துறையில் பல்வேறு மாற்றங்களையும், புதுமைகளையும் புகுத்தி வருகின்றனர். குறிப்பாக குத்துச்சண்டை போட்டிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் முக்கியத்துவம் அளித்து வருகின்றார். வடசென்னை பகுதியில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குத்துச்சண்டை மைதானம் தற்போது அமைக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

குத்துச்சண்டை போட்டியின் மூலம் சேகரிக்கப்பட்ட பணத்தில் ஒரு லட்சம் ரூபாயை மனிதன் சமூகப் பணி மையத்திற்கு அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி நன்கொடையாக வழங்கினார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தேசியக் கல்லூரி துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி, மனிதம் சமூகப் பணி மையத்தின் இயக்குனர் தினேஷ் குமார் உள்ளிட்ட பங்கேற்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com