ஜிம்பாப்வே
ஜிம்பாப்வே

பாகிஸ்தான் vs ஜிம்பாப்வே! பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி!

டி20 உலகக் கோப்பை தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அதில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி போராடி அதிர்ச்சி தோல்வியினை அடைந்தது.

டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றின் நேற்றைய லீக் போட்டியில் பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில், வில்லியம்ஸ் 31 (28) மட்டுமே பெரிய ஸ்கோர் அடித்தார். அடுத்து எர்வின், பிரான் இவான்ஸ் ஆகியோர் தலா 19 ரன்களை அடித்தார்கள். மற்றவர்கள் சொதப்பியதால், ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 130/8 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

பாகிஸ்தான்
பாகிஸ்தான்

முகமது வாசிம் அபாரமாக பந்துவீசி 4/24 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். சதாப் கானும் 3/23 விக்கெட்களை கைப்பற்றினார்.

அடுத்து 130 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் முகமது ரிஸ்வான் 14 (16), பாபர் அசாம் 4 (9) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. அடுத்து இப்டிகார் அகமதும் 5 (10) சொதப்பியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஷான் மசூத் 44 (38), சதாப் கான் 17 (14) ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையிலும், கடைசிவரை விளையாடாமல் ராசா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அடுத்து ஹைதர் அலியும் ராசாவிடம் 0 (1) டக் அவுட் ஆனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து முகமது நவாஸ், முகமது வாசிம் ஆகிய பௌலிங் ஆல்-ரவுண்டர்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

அப்போது கடைசி 2 ஓவர்களில் 22 ரன்கள் தேவைப்பட்டது. நவாஸ் ஒரு சிக்ஸர், 2 முறை இரண்டு ரன்கள், ஒரு சிங்கில் ஓடியதால், அந்த ஓவரில் 11 ரன்கள் கிடைத்தது. கடைசி ஓவரில் நவாஸ் முதல் பந்தில் 3 ரன் அடிக்க, அடுத்த பந்தில் வாசிம் பவுண்டரி அடித்து ஒற்றை ரன்னை எடுத்தார்.

கடைசி 3 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஒரு டாட் பால் சென்ற நிலையில் , 5ஆவது பந்தில் நவாஸ் 22 (18) ஆட்டமிழந்தார்.கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டபோது, அப்ரீதி சிங்கில் அடித்ததால், பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 129/8 ரன்களை சேர்த்து, ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது.

டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை ஜிம்பாப்வே வீழ்த்துவது இதுதான் முதல்முறை.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com