IPL 2023 : நேற்றைய ஐபிஎல் போட்டிகளில், டெல்லி அணியும், ராஜஸ்தான் அணியும் வெற்றி!
ஐபிஎல் 16வது சீசன் போட்டியில், நேற்று இரு போட்டிகள் நடைபெற்ற நிலையில், முதல் போட்டியில் கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் மோதியது.
அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த போட்டியில், டாஸை வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், கொல்கத்தா அணி பேட்டிங்கை துவக்கியது.
துவக்க ஆட்டக்காரர்களாக, ஜேசன் ராய், லிட்டன் தாஸ் களமிறங்கினர். இந்நிலையில், கொல்கத்தா அணியில், ஜேசன் ராய் 43 ரன்களும், ஆன்ட்ரூ ரஸல் 38 ரன்களும் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களை மட்டுமே எடுத்தது.

அடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், டெல்லி அணியின் டேவிட் வார்னர், பிரித்வி ஷா இருவரும் இறங்கிய நிலையில், டேவிட் வார்னர் மட்டும சிறப்பான துவக்கத்தைக் கொடுத்து 41 பந்துகளில் 57 ரன்களை எடுத்தார். மற்றபடி வீரர்கள் அனைவரும் பெரிதளவு சோபிக்காத நிலையிலும், 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களை எடுத்து டெல்லி அணி வெற்றி பெற்றது.
அடுத்து இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற இன்னொரு ஆட்டத்தில், பெங்களூர் அணியும் பஞ்சாப் அணியும் மோதியது.
டாஸை வென்ற பஞ்சாப் கேப்டன் பவுலிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து, பெங்களூர் அணி பேட்டிங்கைத் துவக்கியது.

துவக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி 47 பந்துகளில் 59 ரன்களும், ஃபாப் டூப்ளஸிஸ் 56 பந்துகளில் 86 ரன்களும் எடுத்து, இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். மற்ற வீரர்கள் யாரும் 10 ரன்களைக் கூட தாண்டவில்லை. இதையடுத்து, பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்களை எடுத்தது.
அடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியினர் களமிறங்கினர்.
நேற்றைய ஆட்டத்தில் ப்ரப்சிம்ரன் சிங் 30 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 46 ரன்களும், ஜிதேஷ் ஷர்மா 27 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 41 ரன்களும் எடுத்து அதிரடியை வெளிப்படுத்தினாலும், மற்ற வீரர்கள் யாரும் தங்களது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில், 18.2 ஓவர் முடிவிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 150 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து பெங்களூர் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 6 புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.