உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான பரிசுத்தொகை அறிவிப்பு! எவ்ளோ தெரியுமா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான பரிசுத்தொகை அறிவிப்பு! எவ்ளோ தெரியுமா?

2021-23 ஐசிசி உலக டெஸ்ட சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே, ஓவல் மைதானத்தில் வருகின்ற ஜூன் மாதம் 07-11 ந் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.

இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியைப் பொறுத்தவரை, 2019-21 ICC WTC போட்டியில் இறுதிப் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியுடன் ஏற்கெனவே விளையாடியுள்ள நிலையில், தற்போது 2வது முறையாக இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இந்த இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான பரிசுத் தொகையை, ஐசிசி அறிவித்துள்ளது

அதன்படி, இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு, $1.6 மில்லியன் (INR 13.23 கோடி) பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. ரன்னராக, 2ம் இடத்தைப் பெறும் அணிக்கு $800,000 (INR 6.61 கோடி) வழங்கப்படும். ஐசிசி மொத்தம் $3.8 மில்லியன் பரிசுத் தொகையை அறிவித்துள்ள நிலையில், மேலும் WTCயில் போட்டியிட்ட அனைத்து அணிகளுக்கும் அவற்றின் தரவரிசைப்படி ஒரு தொகையை அளிக்கும்.

அட்டவணைப்படி 3வது இடத்தைப் பிடித்த தென்னாப்பிரிக்காவுக்கு $ 450,000 பரிசுத் தொகையும், 4வது இடத்தைப் பிடித்த இங்கிலாந்துக்கு $ 350,000 பரிசுத் தொகையும், 5வது இடத்தைப் பிடித்த இலங்கைக்கு $ 200,000 பரிசுத் தொகையும் கிடைப்பதோடு, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு $ 100,000 பரிசுத் தொகையும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com