டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் பதவியில் இருந்து ராகுல் நீக்கம்!

டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் பதவியில் இருந்து ராகுல் நீக்கம்!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் பதவியில் இருந்து ராகுல் நீக்கப்பட்டிருப்பது பேசு பொருளாகியுள்ளது.

டெஸ்ட் அணிக்கான துணை கேப்டன் பொறுப்பிலிருந்து பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் நீக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மோசமான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வந்த நிலையில், இந்த நடவடிக்கையை தேர்வுக்கு எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக இருந்த கே.எல். ராகுல் கடந்த சில மாதங்களாக ஃபார்மை இழந்து தடுமாறி வருகிறார். 

தற்போது தொடக்க ஆட்டக்காரரான ராகுல் மோசமான ஃபார்மில் இருப்பதாக சொல்லப்படுகிறது. கடைசி 12 இன்னிங்ஸ்களில் ராகுல் 198 ரன்களே எடுத்துள்ளார். ஆஸ்திரேலியா தொடரில் 3 இன்னிங்ஸ்கள் சேர்த்தே 38 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

தொடர்ந்து சொற்ப ரன்கள் எடுத்து மோசமான விதத்தில் அவர் அடிக்கடி அவுட் ஆவது சர்ச்சையாகியுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் ,”கடந்த 20 வருடங்களில் எந்த ஒரு இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேனும் ராகுலை போல குறைந்த சராசரியுடன் விளையாடியதில்லை. ஆனாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன" என கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து “எனவே ராகுலை நீக்கிவிட்டு அஸ்வினை துணை கேப்டனாக்குவதுடன், திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.” என பலரும் கூறி வருகின்றனர். அதேநேரத்தில் இந்திய அணி பயிற்சியாளர் ராகுல்டிராவிட், ரோஹித் சர்மா, முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ராகுலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையே டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2 0 பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் வகிக்கிறது. கடைசி இரண்டு போட்டிகளுக்கான அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. அதில் அணியின் துணை கேப்டன் பொறுப்பில் இருந்து கே.எல்.ராகுல் நீக்கப்பட்டுள்ளார். விரைவில் அடுத்த துணை கேப்டனை ரோஹித் தேர்வு செய்வார் என்று தகவல்கள் பரவி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com