ரோகித், இஷான் அரை சதம், 5 விக்கெட் எடுத்து மே.இ. தீவுகளை கட்டுப்படுத்திய சிராஜ்!

ரோகித், இஷான் அரை சதம், 5 விக்கெட் எடுத்து மே.இ. தீவுகளை கட்டுப்படுத்திய சிராஜ்!
hp

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

நான்காவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் 181 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்த இந்தியா ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.

365 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. ஆட்ட முடிவில் அந்த அணி 76 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கிரெய்க் பிராத்வைட் மற்றும் மெக்கன்ஸியின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். சந்தர்பால் மற்றும் ஜெர்மைன் ஆகிய இருவரும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

முன்னதாக முதல் இன்னிங்ஸில் 229 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆட்டத்தை மேற்கிந்திய தீவுகள் அணி தொடங்கியது. எனினும் அடுத்த 26 ரன்களில் 5 விக்கெட்டுகளை மளமளவென இழந்து 255 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் 60 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது ஆட்டத்தின் சிறப்பு அம்சமாகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் சிராஜ் ஐந்து விக்கெட்டுகளை சாய்த்தது இது இரண்டாவது முறையாகும்.

இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் ரோகித் சர்மாவும், இஷான் கிஷன் இருவரும் அரைசதம் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி அதிரடியாக ஆடி 12.5 ஓவர்களில் 100 ரன்களை குவித்தனர். இந்த நிலையில் இந்திய அணி 300 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த்து.

சுருக்கமான ஸ்கோர்:

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 438 ரன்கள்.

மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸ்: 255 (கிரெய்க் பிராத்வைட் 75 ரன்கள். இந்திய அணியின் சிராஜ் 60 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.)

இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ்: 181 ரன்களுக்கு 2 விக்கெட்டுடன் ஆட்டத்தை முடித்துக் கொண்டது.

மேற்கிந்திய தீவுகள் இரண்டாவது இன்னிங்ஸ்: இரண்டு விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com