ரொனால்டோவுக்கு இப்படியொரு டபுள் ஆஃபரை கொடுத்த சவுதி அரேபியா? கேட்டாலே அதிர்ந்துபோவீங்க!

ரொனால்டோவுக்கு இப்படியொரு டபுள் ஆஃபரை கொடுத்த சவுதி அரேபியா? கேட்டாலே அதிர்ந்துபோவீங்க!

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியாவின் அல் நஸர் (Al Nassar) என்ற கிளப் அணிக்கு விளையாட புதிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதையடுத்து, ரொனால்டோவுக்கு அதிக அளவு சம்பளம் கொடுத்துள்ளதோடு, கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு மட்டும் ஒரு கட்டுப்பாட்டையும் தளர்த்துள்ளது.

உலகில் அதிகளவு ரசிகர்களைக் கொண்ட கால்பந்து போட்டியில், பிரபலமான வீரர் என்றால் உடனே நினைவுக்கு வருவது கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவருக்கு உலகெங்கும் ரசிகர்கள் உள்ளனர். இவரது ஆட்டத்தைக் காணவே பல்வேறு நாடுகளில் இருந்தும் ரசிகர்கள் அரங்கத்திற்கு வந்து பார்த்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். இவரை சமூகவலைத்தளத்தில் 500 மில்லியனுக்கும் மேற்பட்ட பாலோவர்கள் பின்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இவர் தற்போது உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரராகவும் மாறி உள்ளார். சமீபத்தில், கத்தாரில் நடைபெற்ற FIFA உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்திற்குப் பின்னர், ரொனால்டோ சவுதி அரேபியா நாட்டின் கால்பந்தாட்ட குழுவுடன் தன்னை இணைத்துள்ளார்.

சவுதி அரேபியாவின் அல் நஸர் (Al Nassar) என்ற கிளப் அணிக்கு விளையாட புதிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதையடுத்து, இந்த நடப்பாண்டு முதல் 2025 ஜூன் மாதம் வரை ரொனால்டோ சவூதி நாட்டின் கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாட ஒப்புதல் வாங்கியுள்ளது.

இதையடுத்து, இதுவரை எந்த விளையாட்டு வீரரும் வாங்காத சம்பளத்தை ரொனால்டோவுக்கு சவுதி கொடுப்பதோடு, சில தளர்வையும் அவருக்கு வழங்கி உள்ளது.

அதன்படி, ரொனால்டோவிற்கு ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 213 மில்லியன் டாலர் சம்பளமாக அறிவித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில், சுமார் 1,730 கோடி ரூபாய் ஆகும். இதன்மூலம், உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் வீரராகவும் உருவாகியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், பொதுவாக அரபு நாடுகளில் கடுமையான கட்டுப்பாடுகளும், தண்டனைகளும் இருப்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வகையில், முக்கியமான கட்டுப்பாடான ஆணும், பெண்ணும் திருமணத்திற்கு முன்பாக ஒன்றாக சந்திப்பது, ஒரே வீட்டில் வசிக்கும் லிவிங் டுகெதர் போன்ற மேற்கத்திய நாகரிகத்திற்கு சவுதி நாட்டில் அனுமதியே கிடையாது.

cristiano ronaldo and georgina rodriguez
cristiano ronaldo and georgina rodriguez

அப்படியிருக்க, கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு மட்டும் லிவிங் டுகெதர் உறவு முறையில் இருக்க சவுதி நாடு அனுமதி வழங்கியுள்ளது. காரணம் என்னவென்றால், கிறிஸ்டியானோ ரொனால்டோ திருமண பந்தத்தில் ஈடுபடாமல், தனது பெண் தோழியான மாடல் அழகி ஜார்ஜியாவுடன் ஒரே வீட்டில், குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். அதனாலேயே, சவூதி நாடு கிறிஸ்டியானோ ஜார்ஜியாவுக்கு மட்டும் லிவிங் டுகெதர் உறவு முறையில் இருக்க அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com