ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தி! FIFA 2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டி!

ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தி! FIFA 2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டி!

உலகின் பெரும்பாலான ரசிகர் கூட்டத்தைக் கொண்ட விளையாட்டுப் போட்டிகளில் முக்கியமானது கால்பந்து விளையாட்டு போட்டி. இந்த போட்டியைக் காண ஸ்டேடியத்தில் 60,000 முதல் 80 ஆயிரம் ரசிகர்கள் வரை பார்வையாளர்களாக கலந்துகொள்வர். ஸ்டேடியமே அதிர்ந்துபோகும் அளவுக்கு குதூகலிப்புடன் ரசிகர்கள் போட்டியை ரசித்துக் கொண்டாடுவர்.

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, FIFA 2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள், கத்தாரில் நாளை (நவம்பர் 20) தொடங்கி டிசம்பர் 18 ஆம் தேதி வரை, கிட்டதட்ட ஒரு மாதம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், கத்தாரில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானங்களை சுற்றி பீர் விற்க தடை விதிக்கப்படுவதாக சர்வதேச கால்பந்து சங்சங்களின் கூட்டமைப்பு (FIFA) அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டி நாளை கத்தாரில் கோலாகலமாக துவங்கி, தோஹா, மஸ்கட் உட்பட 8 நகரங்களில் உள்ள மைதானங்களிலும் இந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறவிருக்கிறது. இதற்காக அர்ஜென்டினா, பிரான்ஸ் உள்ளிட்ட உலகக்கோப்பையில் பங்கேற்கும் அணிகள் எல்லாம் வந்துள்ளதோடு, தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பும், ஆரவாரமும் அதிகமாக காணப்படும்.

இந்நிலையில், உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெறும் அனைத்து விளையாட்டு மைதானங்களை சுற்றியுள்ள சுற்றுவட்டார பகுதிகளில் பீர் மதுபானம் விற்க தடை விதிக்கப்படுவதாக FIFA அதிரடியாக அறிவித்துள்ளது. அதை தவிர்த்து, போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு ஸ்டேடியத்தில் தண்ணீர் குடிப்பதற்கு தாராளமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு நடைபெறும் இடத்திலும், அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் ரசிகர்களிடையே பிரச்சினைகள் எதுவும் வராமல் தடுக்கவும், எல்லா ரசிகர்களும் எந்த தொந்தரவுமின்றி ஆட்டத்தை கண்டுகளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும்தான் இந்த பீர் விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், முறையாக உரிமம் வாங்கி விற்பனை செய்துவரும் விற்பனையகங்கள், FIFA திருவிழா நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பீர் விற்கப்படும் என்றும் FIFA அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com