யுவராஜ் சிங் அடித்த சிக்ஸர் மறக்கமுடியாதது:வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட்!

ஸ்டுவர்ட் பிராட்
ஸ்டுவர்ட் பிராட்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் அறிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் போட்டியின் இறுதி டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தின்போது ஸ்டூவர்ட் பிராட் தமது முடிவை அறிவித்தார்.

இங்கிலாந்து அணியின் சிறந்த பந்துவீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளதை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீர்ர் யுவராஜ் சிங் வரவேற்று அவருக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் ஒரு ஓவரில் ஸ்டூவர்ட் பிராடின் பந்தை சிக்ஸருக்கு அனுப்பியதை யுவராஜ் நினைவுகூர்ந்தார்.

“ஸ்டூவர்ட், டெஸ்ட் போட்டிகளில் உங்களின் சிறப்பான பந்துவீச்சுக்கு தலைவணங்குகிறேன். உங்களது பந்துவீச்சை பார்த்தாலே எதிரணி பேட்ஸ்மென்களுக்கு கலக்கம் ஏற்படும். அந்த அளவுக்கு சிறப்பாக பந்துவீசியதுடன் சாதனை படைத்த உங்களுக்கு எனது வாழ்த்துகள். கிரிக்கெட் டெஸ்ட் வரலாற்றின் உங்களின் நெடிய பயணமும், மன உறுதிப்பாடும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்” என்று டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார் யுவராஜ்.

ஸ்டுவர்ட் பிராட் மற்றும் யுவராஜ் சிங்
ஸ்டுவர்ட் பிராட் மற்றும் யுவராஜ் சிங்

கிரிக்கெட் ஆட்டத்தில் ஸ்டூவர்ட் பிராட் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். 37 வயதான பிராட், 600 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு முறை ஹாட்ரிக் எடுத்த, இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரே பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்தான். 2023 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் சீரிஸ் போட்டியில் 600-வது விக்கெட்டை எடுத்து சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சனுக்குப் பிறகு இந்த சாதனையை எட்டியுள்ள இரண்டாவது பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்.

தமது பந்துவீச்சில் இந்திய அணி வீர்ர் யுவராஜ் சிங் அடித்த சிக்ஸர் வாழ்நாளில் மறக்க முடியாதது என்று பிராட் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். எனக்கு அப்போது 21 வயது இருக்கும் என்று நினைக்கிறேன். நான் வீசிய பந்தை யுவராஜ் அனாயாசமாக சிக்கஸருக்கு அனுப்பினார். அவரது ஆட்டம் அற்புதமாக இருந்தது. அப்போது நான் பந்துவீச்சில் தெளிவில்லாமல் இருந்தேன். ஆனால், அந்த அனுபவத்திலிருந்து பல பாடங்களை கற்றுக்கொண்டேன். அதன் பிறகுதான் எனது பந்துவீச்சை கட்டமைத்துக் கொண்டேன் என்றார் ஸ்டூவர்ட் பிராட்.

ஆஷஸ் தொடரின் ஐந்தாவது இறுதி டெஸ்ட்  போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 384 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற நிலையில் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com