851 ரன்கள் உட்பட ஒரே போட்டியில் பல சாதனைகள் படைத்த சுப்மன் கில்!
குஜராத் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சுப்மன் கில் நேற்றைய 2வது குவாலிஃபயர் போட்டியில் மும்பை அணிக்கெதிராக சதம் அடித்ததன் மூலம் பல சாதனைகளை படைத்துளளார்.
நேற்றைய 2வது குவாலிஃபயர் போட்டியில் மும்பை அணிக்கெதிராக விளையாடிய சுப்மன் கில் 60 பந்துகளில் 129 ரன்களைக் குவித்தார். இதில் 7 பவுண்டரிகளும், 10 சிக்ஸர்களும் அடங்கும். அதன்படி,
இந்த சீசனில் இதுவரை நடந்த போட்டியில் 129 ரன்கள் அடித்ததன் மூலம் ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
ஐபிஎல் 2023 சீசனில், அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில், இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில், 3 சதங்கள் அடித்து முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இந்த ஐபிஎல் சீசனில் ஒரே போட்டியில் 10 சிக்ஸர்களை அடித்தன் மூலம் இந்த ஐபிஎல்-லில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து, ராஷித் கான் சாதனையை சமன் செய்துள்ளார்.

இந்த போட்டியில் 10 சிக்ஸர்களை அடித்ததன் மூலம், இந்த ஐபிஎல்-லில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் வரிசையில், 14வது இடத்தில் இருந்த சுப்மன் கில் 33 சிக்ஸர்களுடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்த சீசனில், இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில், 851 ரன்களைக் குவித்து, ஆரஞ்சு கேப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
ஒட்டுமொத்த ஐபிஎல் சீசன்களில் ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில், கில் 851 ரன்கள் எடுத்து 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இன்னும் இந்த சீசனில் இறுதிப்போட்டி மீதமுள்ள நிலையில், அந்த போட்டியில் சுப்மன் கில்லின் வேகம் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து இந்த சாதனைகள் மேலும் மைல்கல்லை எட்டும் என்பதில் சந்தேகமில்லை.