மழை குறுக்கிடுவதை தடுக்க சுப்மன் கில் கொடுத்த ஐடியா... பிசிசிஐ இதைப் பற்றி ஆலோசிக்குமா?

மழை குறுக்கிடுவதை தடுக்க சுப்மன் கில் கொடுத்த ஐடியா... பிசிசிஐ இதைப் பற்றி ஆலோசிக்குமா?

நேற்று நடந்த இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி மழையினால் ரத்தானதை தொடர்ந்து இவ்வாறு அடிக்கடி கிரிக்கெட் போட்டிகள் மழையால் ரத்து செய்யப்படுவதை பார்க்கும் போது தனக்கு வெறுப்பாக இருப்பதாக கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் ரசிகர்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்று வருவது தான் விளையாட்டுப் போட்டிகள். அப்போட்டிகள் நடைபெறும்போது சில நேரங்களில் மழை குறுக்கீடு  இருப்பதால் போட்டிகள் ரத்தாகும் சூழ்நிலை வழக்கமாகவே நடந்து வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியும் சரி, தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியிலும் சரி மழையினால் சில ஆட்டங்கள் ரத்தாகி வருகின்றன. இந்நிலையில் மழையினால் விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்படுவதால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் கூறுகையில், மழையால் போட்டிகள் முடிவுகள் இன்றி ரத்தாவதை பார்க்கும்போது தனக்கு மிகவும் கடுப்பாக இருக்கிறது என்றும், மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் தற்போது இரண்டாவது போட்டியும் மழையால் ரத்தானது  தனக்கு வேதனை அளிக்கிறது. இவ்வாறு போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டால் ஒரு வீரரானாலும் சரி ஒரு ரசிகரானாலும் சரி இருவருக்குமே அது மன உளைச்சலையும் ஏற்படுத்தி விடும்.

அதனால் இதுபோன்று மேற்கொண்டு நடைபெறாமல் இருக்க கிரிக்கெட் வாரியம் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியவர், கிரிக்கெட் போட்டிகளை உள் அரங்கில் நடத்த வேண்டும் எனவும் மழையின் போது அந்த மேற்கூரைகள் மூடும் வகையில் மைதானங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com