மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டி!

மழையால் ஆட்டம் பாதிக்கப்படுமா?
மேற்கிந்திய தீவுகள் அணி
மேற்கிந்திய தீவுகள் அணி

ருநாள் சர்வதேச போட்டியில் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்ற இந்திய அணி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மற்றொரு ஐந்து ஒருநாள் டி20 போட்டியின் முதல் ஆட்டத்தை இன்று சந்திக்கிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி, தரோபாவில் நடைபெறுகிறது. வெள்ளை நிற பந்துகள் அடிப்படையில் போட்டி நடைபெறும். டிரினிடாட் குயின்ஸ்பார்க் ஓவல் மைதானத்தில் போட்டிகள் நடைபெறும் என்றாலும் மழையால் ஆட்டம் பாதிக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஜூன் மாதம் தொடங்கும் பருவமழை டிசம்பர் வரை நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது. காலையில் சிறிது வெயில் அடித்தாலும் பின் மேகமூட்டங்கள் சூழ்ந்து பிறபகலில் திடீரென மழைபெய்கிறது. எனவே மழையால் ஆட்டம் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

இன்று மழை பெய்வதற்கு 50 சதவீத சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை முன்னறிவிப்பு தெரிவித்துள்ளது. மேலும் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. எனவே ஆட்டம் பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

குயின்ஸ்பார் ஓவல் மைதானத்தில் வடிகால் வசதிகள் இருந்தாலும் தொடர் மழை சவாலாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விட்டுவிட்டு மழை பெய்தாலும் ஆடுகளம் பாதிக்கப்படும். ஏனெனில் டி20 போட்டிகளுக்கு ஆடுகளம் நன்றாக இருக்க வேண்டும்.

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் ஆகிய இரு அணிகளுமே இன்றைய ஆட்டத்தை ஆவலுடன்  எதிர்நோக்கியுள்ளன. மழை இல்லாமல் முழு ஆட்டத்தையும் விளையாடுவதையே விரும்புகின்றன. வானிலையில் மாற்றம் ஏற்பட்டால் இரு அணிகளும் அதற்கு தகுந்தவாறு திட்டமிட்டு விளையாட வேண்டியிருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com