
இந்தியா-ஆஸ்திரேலியா ஆணிகளுக்கு இடையிலான முதலாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நேற்றிரவு நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
இதையடுத்து கேப்டன் ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ரோகித் சர்மா 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த விராட் கோலி 2 ரன்னில் கேட்ச்சாகி பெவிலியன் திரும்பினார். பின்னர் 20 ஓவர் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது.
அடுத்ததாக 209 ரன்கள் என்ற இலக்குடன் இரண்டாவதாக களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த இரு அணிகளுக்கு இடையிலான இத்தொடரின் அடுத்த போட்டி வருகிற 23-ம் தேதி நாக்பூரில் நடக்கவுள்ளது குறிப்பிடத் தக்கது.