டென்னிஸ்; ரோஜர் பெடரர் ஓய்வு அறிவிப்பு!

டென்னிஸ்; ரோஜர் பெடரர் ஓய்வு அறிவிப்பு!

டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார். 41 வயதாகும் ரோஜர் பெடரர். அவர் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம்களை வென்றுள்ளார்.அவரது இந்த அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

-இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ரோஜர் பெடரர் தெரிவித்ததாவது;

எனக்கு 41 வயதாகிவிட்டது, எனது 24 ஆண்டுக்கால டென்னிஸ் பயணத்தில் 1500க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளேன். நான் எதிர்பார்த்ததை விட எனக்கு டென்னிஸ் உலகம் என்னை உச்சத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளாக எனக்குக் காயங்கள் மற்றும் அறுவை சிகிச்சைகள் போன்ற சவால்களை அளித்துள்ளது. தற்போது டென்னிஸ் போட்டிகளில் ஓய்வு பெற முடிவெடுத்துள்ளேன்.எதிர்காலத்தில் அதிக டென்னிஸ் விளையாடுவேன், ஆனால் கிராண்ட்ஸ்லாம் அல்லது சுற்றுப்பயணத்தில் அல்ல.

மேலும் என்னுடைய பயணத்தில் எல்லா நேரத்திலும் எனக்குப் பக்கபலமாக இருக்கும் எனது மனைவி மிகவுக்கு நன்றி. என்னுடைய ஒவ்வொரு போட்டியின் முன்பும் என் மனைவி எனக்கு ஊக்கம் அளிப்பதில் தவறியதே இல்லை.

என் மனைவி 8 மாத கர்ப்பிணியாக இருந்த போதும் கூட நான் விளையாடும் போட்டிகளை நேரில் வந்து காண்பார். என்னைக் கடந்த 20 ஆண்டுகளாக நன்றாகக் கவனித்து வருகிறார்.அவருக்கு எனது நன்றி.

-இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

டென்னிஸ் உலகில் ஜாம்பவானாக வலம் வந்த ரோஜர் ஃபெடரரின் ஓய்வு குறித்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com