'தல' ரசிகர்களுக்கு காணக்கிடைத்த அந்த அழகிய சம்பவம்!
நேற்றைய ஐபிஎல் போட்டியின் 55வது போட்டியில் சிஎஸ்கே அணியும் டெல்லி அணியும் மோதியதில் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சென்னை அணி வெற்றி பெற்றது ஒரு பக்கம் சிஎஸ்கே ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தாலும், அதையெல்லாம் தாண்டி, சிஎஸ்கே அணியில் 'தல' தோனி இருக்கிறார் என்பதே ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக பார்க்கப்படுகிறது.
அந்தளவுக்கு தோனி என்ற பெயருக்கேற்ப அவருக்கான மவுசு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டுதான் வருகிறது.
நேற்றைய போட்டியில் சென்னை அணி 16.2 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து வெறும் 126 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அதுவரை மிகவும் கவலையுடன் காணப்பட்ட சென்னை சேப்பாக்கம் மைதானம், 7வது விக்கெட்டுக்கு தோனி களமிறங்கியதும் மொபைலில் டார்ச்லைட் ஒரு பக்கம், தோனி... தோனி... என்ற கரவொலி ஒருபக்கம் என மைதானமே அதிர்ந்தது.
அதுவரை ரசிகர்கள் மனதில் குடிகொண்டிருந்த சோர்வெல்லாம் நீங்கி, புது உற்சாகத்தில் துள்ளிக்குதித்தனர். எல்லாம் அந்த ஒருவருக்காகத்தான்.
அந்தவகையில் அவர் சார்ந்த விஷயங்கள் எதுவாக இருந்தாலும், அது ரசிகர்களால் மிகவும் கவரப்பட்டு வைரலாகி விடும். அந்தவகையில் தற்போது, சமூகவலைதளங்களில் ஒரு வீடியோ ஒன்று வெளியாகி படுவைரலாகி வருகிறது.
நேற்று டெல்லி அணியுடனான போட்டி முடிவடைந்து சென்னை அணி வெற்றி பெற்ற நிலையில், தோனியின் மகள் ஷிவா மைதானத்தின் உள்ளே பாசத்துடன் ஓடிவந்து தனது அப்பாவை கட்டிப் பிடிக்கவும், தோனி தனது செல்ல மகளின் கூந்தலை பிடித்து விளையாடுவதும், கொஞ்சுவதும் என தந்தை மகளின் அந்த அழகிய வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.
பாசமிகு தந்தை மகளின் இந்த அழகான வீடியோ, ரசிகர்களால் ரசிக்கப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகிறது.