பிரபல கிரிக்கெட் ஜாம்பவானுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது! அந்த ஜாம்பவான் யார் தெரியுமா?
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர்தான் ஜாக் காலிஸ். இவர் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என ஆல்ரவுண்டராக வலம் வந்தவர்.
இதுவரை 166 டெஸ்ட் போட்டிகளிலும், 328 ஒரு நாள் போட்டிகளிலும், 25 டி20 சர்வதேச போட்டிகளிலும், 98 ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.
அதுமட்டுமல்லாமல், டெஸ்ட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 51 சதங்களை அடித்து முதலிடத்தில் உள்ள நிலையில், அவருக்கு அடுத்தபடியாக 45 சதங்கள் அடித்து 2வது இடத்தில் உள்ளார்.

ஆல்ரவுண்டரான ஜாக் காலிஸ், திறமையாக மிதவேக பந்து வீச்சாளரும்கூட. டெஸ்ட் போட்டிகளில் 166 போட்டிகளில் விளையாடி 292 விக்கெட்டுகளை குவித்துள்ளார்.
2014ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஜாக் காலிஸ் ஓய்வு பெற்றாலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது 47 வயதாகும் ஜாக் காலிஸ்-ஸுக்கு நேற்று காலை 8.37 மணிக்கு, அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. Chloé Grace Kallis என பெயரிடப்பட்டுள்ள குழந்தையும், தாயும் நலமாக இருப்பதாக, தனது பதிவில் தெரிவித்தபடி, குழந்தையின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.