விளையாட்டின் போது சிகரெட் கேட்டு அந்த வீரர் செய்த காரியம்! திகைப்பில் ரசிகர்கள்!

விளையாட்டின் போது சிகரெட் கேட்டு அந்த வீரர் செய்த காரியம்! திகைப்பில் ரசிகர்கள்!

தென்னாப்பிரிக்க அணியானது தற்போது ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் டெஸ்ட் போட்டி நடக்கும் சமயத்தில், மைதானத்தில் நின்றபடி ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபஸ்சாக்னே சிகரட் மற்றும் லைட்டரை கேட்டது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில், தென்னாப்பிரிக்கா அணி இதுவரை 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நிலையில், இரண்டிலும் தோல்வியைத் தழுவிய நிலையில் 2-0 என்ற முன்னிலையில் ஆஸ்திரேலிய அணி தொடரை ஏற்கெனவே வென்றுவிட்டது.

இந்நிலையில் தொடரின் 3வது டெஸ்ட் போட்டியானது சிட்னியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வரும் நிலையில், துவக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 10 ரன்களுடனும், மார்னஸ் லாபஸ்சாக்னே 79 ரன்களுடனும் அவுட் ஆன நிலையில் முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளனர்.

டேவிட் வார்னர் சொற்ப ரன்களில் அவுட் ஆனாலும், மார்னஸ் லாபஸ்சாக்னே சிறப்பாக விளையாடிய நிலையில், மைதானத்தில் இருந்தபடி அவர் செய்த காரியம் கிரிக்கெட்டை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களை திகைப்பிற்குள்ளாக்கியது.

வழக்கமாக மைதானத்தில் இருக்கும் வீரர்கள் தண்ணீர், கிளவுஸ், பேட் என கேட்பதை நம் பலமுறை பார்த்திருப்போம். ஆனால் மார்னஸ் லாபஸ்சாக்னே சற்று வித்தியாசமாக சிகரெட்டும், லைட்டரும் வேண்டும் என செய்கையில் காட்டியதைத் தொடர்ந்து ரசிகர்கள் குழம்பினர். இதுகுறித்த விவாதமும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

ஆனால் மார்னஸோ, ஒரு காரணமாகத்தான் அந்த இரண்டையும் கேட்டுள்ளார். அதாவது மார்னஸின் ஹெல்மெட்டில் இருக்கும் பிளாஸ்டிக் நீட்டிக்கொண்டு இருந்ததால், அது அவருக்கு தொந்தரவாக இருக்க, அதை சிகரெட் லைட்டர் மூலம் சூடாக்கி அதை சரிசெய்யலாம் என நினைத்து இவ்வாறு கேட்டுள்ளார்.

இதை அவர் செய்கை மூலம் செய்து காட்டியதுதான் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com