246 ரன்களை அடித்தும் அடுத்து அவருக்கு நடந்த சம்பவந்தான் ட்விஸ்ட்டே...

246 ரன்களை அடித்தும் அடுத்து அவருக்கு நடந்த சம்பவந்தான் ட்விஸ்ட்டே...

- வாசுதேவன், பெங்களூரு

1967 ஆம் ஆண்டு ஜூன் மாதம் லீட்ஸ் நகரில் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நடந்துகொண்டிருந்த சமயம். டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

அப்போது துவக்க ஆட்டக்காரராக மூக்கு கண்ணாடி அணிந்த வீரர் களமிறங்கினார். முதல் நாள் விளையாட்டில் விக்கெட்டை பறிகொடுக்காமல் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மீண்டும் இரண்டாவது நாளிலும் அவுட் ஆகாமல் நின்று நிதானமாக விளையாடி மேலும் 140 ரன்களைச் சேர்த்தார். ஆக ஆட்டமிழக்காமல் மொத்தம் 246 ரன்களை அந்த வீரர் எடுத்ததோடு இங்கிலாந்து அணிக்கு வெற்றியையும் தேடித் தந்தார்.

அணியின் வெற்றிக்கு காரணம் அந்த வீரர் அடித்த ரன்களே என்று பார்க்கப்பட்டாலும், அப்போதுதான் அந்த ட்விஸ்ட்டே நடந்தது. அடுத்த டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த நிலையில், அந்த டெஸ்ட்டிலிருந்து நீக்கப்பட்டார் அந்த வீரர்.

இரட்டை சதம் அடித்தும் அவர் நீக்கப்பட்டதற்கு காரணம், எதிரணியான இந்திய அணியில், ஏற்கனவே இரண்டு ஸ்டிரைக் பவுலர்கள் குறைவாக இருந்தபோதிலும், அந்த வீரர் ஆமை வேகத்தில் மெதுவாக விளையாடி 555 பந்துகளை சந்தித்தே அந்த 246 ரன்களைக் குவித்தார். இந்த ஆமை வேக ரன் குவிப்புதான் இங்கிலாந்து தேர்வுக் குழுவினர் அவரை நீக்கியதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

அவர் களத்தில் நின்று விளையாடி, தனது அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரான 246 ரன்களைப் பெற 555 பந்துகளை சந்தித்ததோடு மட்டுமல்லாமல், 573 நிமிடங்களை அவர் எடுத்துக்கொண்டார். இது டெஸ்ட் போட்டிகளில் மிக மோசமான ஒன்றாகவும் பார்க்கப்பட்டது.

Geoff Boycott
Geoff Boycott

இவ்வாறு அடுத்த டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட அந்த சிறந்த துவக்க ஆட்டக்காரர் ஜியோப் பாய்காட் (Geoff Boycott)தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com