இனி சாதிக்க ஏதும் இல்லை… ஓய்வுபெற கால்பந்து வீரர் மெஸ்ஸி முடிவா?

இனி சாதிக்க ஏதும் இல்லை… ஓய்வுபெற கால்பந்து வீரர் மெஸ்ஸி முடிவா?

பிரபல கால்பந்தாட்ட வீரர் லயோனல் மெஸ்ஸி. 7 பலூன் டி’ஓர் விருது, நான்கு முறை யு.இ.எஃப்.ஏ. சாம்பியன் பட்டம், கோபா அமெரிக்கா மற்றும் எப்.ஐ.எஃப்.ஏய்யின் உலக கால்பந்து கோப்பை என பல கோப்பைகளையும் விருதுகளையும் வென்றவர். இனி கால்பந்தில் அவர் சாதிக்க வேண்டியது எதுவும் இல்லை என்றுகூட சொல்லலாம்.

கடந்த ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியில் அவரது அர்ஜென்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி கோப்பை வென்றது.

சர்வதேச போட்டியிலிருந்து எப்போது ஓய்வுபெறுவது என்பது குறித்து அவர் இதுவரை அறிவிக்காவிட்டாலும், இனி நான் சாதிக்க ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளதன் மூலம் கால்பந்து விளையாட்டிலிருந்து மெஸ்ஸி ஓய்வுபெற முடிவுசெய்துள்ளது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ஒரு பேட்டியில் மெஸ்ஸி கூறியதாவது: “அர்ஜென்டினா அணிக்காக விளையாடி உலகக் கோப்பையை கைப்பற்றியது உள்ளிட்ட பலசாதனைகளை செய்துள்ளேன். அநேகமாக எனது கால்பந்தாட்ட வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. தேசிய அணிக்காக விளையாடியும் சாதனை புரிந்துள்ளேன். தனிப்பட்ட

முறையிலும் சாதனை படைத்துள்ளேன். இது நடக்குமா என்று நான் ஒரு காலத்தில் நினைத்திருந்தேன். ஆனால், நான் நினைத்தது எல்லாம் நடந்தது. 2021 இல் கோபா அமெரிக்கா கோப்பை முதல் உலகக் கோப்பை வரை அனைத்தும் எங்கள் அணி பெற்றுள்ளது. குறைசொல்லவும் ஒன்றும் இல்லை. இனி கேட்டுப் பெறவும் ஒன்றும் இல்லை. இனி ஓய்வுபெறுவதே சரியானதாக இருக்கும் என்கிறார் 35 வயது இளைஞரான மெஸ்ஸி.

உலக கோப்பையை வெல்லவேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவாக இருந்தது. அந்த கனவும் நனவாகிவிட்டது. உலக கோப்பையை மறைந்த டிகோ மரடோனாவிடமிருந்து பெற வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. ஆனால், அது முடியாமல் போய்விட்டது என்று மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

லயொனல் மெஸ்ஸி, பார்ஸிலோனோவில் உள்ள பாரிஸ் செயின் ஜெர்மைன் கிளப்புக்காக ஒப்பந்த அடிப்படையில் விளையாடி வருகிறார். அவரது ஒப்பந்தம் இந்த ஆண்டு ஜூன் மாதம் முடிவடைகிறது. ஆனால், ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் எண்ணம் மெஸ்ஸிக்கு இல்லை என்று தெரிகிறது.

சமீபத்தில் செளதி அரேபியாவின் அல் ஹிலால் கால்பந்து சங்கம், ஆண்டுக்கு 350 மில்லியன் டாலர் சம்பளம் வழங்குவதாக ஒப்பநதம் பேச முன்வந்தது. ஆனால், மெஸ்ஸி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருவேளை அவர் இந்த

ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் உலகில் அதிக சம்பளம் வாங்கும் கால்பந்து வீர்ராக இருந்திருப்பார். ஏனெனில் சமீபத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ செளதியின் அல்நாஸர் அணிக்காக ஓப்பந்தமாகியுள்ளார். அவருக்கு ஆண்டுக்கு 210 மில்லியன் டாலர் சம்பளமாகப் பேசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com