சிஎஸ்கே அணிக்கு ஆப்பு வைக்கும் 4 போட்டிகள்!
ஐபிஎல் 2023 போட்டியின் 16வது சீசன் போட்டிகள் விறுவிறுப்பான கட்டதை எட்டியுள்ளன.
இன்னும் 6 லீக் போட்டிகள் மட்டுமே நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அணிகளுக்கும் பங்குபெற ஒரு போட்டிகள் மீதமுள்ள நிலையில், ஹைதராபாத் அணி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு மட்டும் 2 போட்டிகள் மீதமுள்ளன.
தற்போதுவரை நடந்துமுடிந்துள்ள போட்டிகளைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட 8 அணிகளுக்கு ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பு உள்ளது. ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
அதாவது குஜராத், சென்னை, லக்னோ, மும்பை அணிகள் மீதமுள்ள ஒரு போட்டியில் தோல்வியடைந்து, பெங்களூரு அணி தனது 2 போட்டிகளிலும் வெற்றிபெறும் பட்சத்தில், பெங்களூரு அணி 16 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், சென்னை, லக்னோ அணிகள் முறையே 3 மற்றும் 4ம் இடத்தைப் பெறும். மும்பை அணி வெளியேறிவிடும்.
இதை வேறு விதத்திலும் பார்ககலாம். குஜராத், சென்னை, லக்னோ, மும்பை மற்றும் பெங்களூரு அணி தங்களது அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து, ராஜஸ்தான், கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் மீதமுள்ள ஒரு போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில், மும்பை, ராஜஸ்தான், கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் தலா 14 புள்ளிகளுடன், நெட் ரன் ரேட் விகிதத்தில் 4ம் இடத்தைப் பிடிக்கும்.

இதில் சென்னை அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்புக்கு வரும் ஆப்புதான் ஹைலைட்டே... அது எப்படி என்பதை பார்ப்போம்.
சென்னை மீதமுள்ள ஒரு போட்டியில் தோல்வியடைந்து, லக்னோ, மும்பை, பெங்களூரு அணிகள் மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில், லக்னோ அணி 17 புள்ளிகளுடன் 2ம் இடத்திற்கும், மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் தலா 16 புள்ளிகளுடன் நெட் ரன் ரேட் அடிப்படையில், 3 மற்றும் 4ம் இடத்தைப் பெறும் பட்சத்தில் சென்னை அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை இழக்கும் சூழ்நிலை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.