3-வது ஒருநாள் போட்டி: வெற்றி பெறவேண்டிய நிர்பந்தத்தில் இந்திய அணி!

இந்திய அணி
இந்திய அணி

 ந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி-20 ஒருநாள் போட்டி செவ்வாய்க்கிழமை கயானாவில் நடைபெறுகிறது. ஒருநாள் போட்டித் தொடரில் தோல்வியை தவிர்க்க வேண்டுமானால் இன்றைய ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெறுவது முக்கியமானது.

2016 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான டி20 போட்டியில் வெற்றிவாய்ப்பை இழந்த இந்தியா, இப்போது நடைபெறும் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியைவிட 0-2 என்ற நிலையில் பின்தங்கியுள்ளது. அதாவது இதுவரை நடந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.

இந்திய அணியின் முன்னிலை ஆட்டக்காரர்களான இஷான் கிஷன், சுபம் கில், சூரியகுமார் யாதவ் ஆகியோர் சரியாக விளையாடாததே இந்த தோல்விக்கு காரணமாகும். இதனால் சஞ்சு சாம்சன், திலக் வர்மா இருவரும் அதிக நிர்பந்த்த்துடன் விளையாட வேண்டியிருந்த்து.

உலக கோப்பை போட்டிகள்  நடைபெற உள்ள நிலையில், ஆசிய கோப்பை போட்டிகள் இந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில்  சுபம் கில், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் ஒருநாள் போட்டியில் கவனம் செலுத்தி ஆடி ரன்களை குவித்து திறமையை வெளிப்படுத்துவது அவசியமானதாகும்.

இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் கேப்டன் ஹர்திக் பாண்டியா, இந்திய வீர்ர்கள் பொறுப்புடன் விளையாடவில்லை என்று கூறியுள்ளது சரியானதே.

சென்ற போட்டியில் கைகளில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் விளையாடவில்லை. இந்த போட்டியில் அவர் அணியில் இடம்பெறுவாரா என்பது தெரியவில்லை.

எதிரணியைச் சேர்ந்த நிக்கோலாஸ் பூரன் உள்ளிட்டோரின் அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்த வேண்டுமானால், சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கியம். சென்ற போட்டியில்கூட இடது கை சுழற்பந்து வீச்சாளர் அக்ஸரை முறையாக பயன்படுத்தவில்லை.

மேற்கிந்திய தீவுகள் அணியினர் இரண்டு போட்டிகளில் வென்ற நிலையில் தைரியமாக உள்ளனர் என்றாலும் சென்ற ஆட்டத்தில் நிக்கோலாஸ் பூரனைத் தவிர  வேறு எவரும் சரியாக விளையாடவில்லை. அந்த அணியைச் சேர்ந்தவர்களும் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com