நியூசிலாந்து வெற்றிக்கு இதுதான் காரணம்...

நியூசிலாந்து வெற்றிக்கு இதுதான் காரணம்...

நியூசிலாந்து அணியுடனான டி20 தாெடர் டிராவில் முடிவடைந்த நிலையில் தற்போது 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடர் இரு அணிகளுக்குமிடையே நடந்து வருகிறது.

முதல் ஒரு நாள் போட்டி இன்று ஆக்லாந்தில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், சுப்மன் கில் களமிறங்கினர். இருவருமே நன்கு விளையாடி சிறப்பான துவக்கத்தை அளித்தனர். இந்நிலையில் அணியின் ஸ்கோர் 124ஆக இருக்கும்போது சுப்மன் கில் 50 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்னார். அவரைத் தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த ஷிகர் தவானும் அதே ஸ்கோரில் 77 ரன்கள் எடுத்தநிலையில் ஃபின் ஆலனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

அதிரடியாக விளையாடும் ரிஷப் பண்ட் 15 ரன்களுக்கும், சூர்யகுமார் யாதவ் 4 ரன்களுக்கும் அடுத்தடுத்து வெளியேற, 160 ரன்களுக்குள் 4 விக்கெட்கள் பறிபோனது. நிலைமையைப் புரிந்துகொண்டு அதிரடியாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 80 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு இந்திய அணி 306 ரன்களை குவித்தது.

307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு, இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு தொடக்கத்தில் சற்று தடுமாற்றத்ததை உண்டுபண்ணியது. அதனால் ஃபின் ஆலன், கான்வே, மிட்செல் விக்கெட்கள் சொற்ப ரன்களிலேயே பறிபோயின. இதனால் நியூசிலாந்து அணி 88 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

அடுத்து சஞ்சு சாம்சன் - டாம் லாதம் ஜோடி சேர்ந்தது. தங்கள் அணியின் நிலைமையைப் புரிந்துகொண்டு, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தியா பவுலர்கள் எவ்வளவு முயன்றும் இந்த ஜோடியை கடைசிவரை பிரிக்கவே முடியவில்லை. சிறப்பாக ஆடிய டாம் லாதம் 104 பந்துகளில் 145 ரன்களையும், மறுமுனையில் கேப்டன் கேன் வில்லியம்சன் 98 பந்துகளில் 94 ரன்களை எடுத்தும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என நியூசிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com