நாளை நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கெதிரான 3வது டெஸ்ட்... இந்திய அணியில் யார் யார் இடம்பெற வாய்ப்பு?

நாளை நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கெதிரான 3வது டெஸ்ட்... இந்திய அணியில் யார் யார் இடம்பெற வாய்ப்பு?

தற்போது நடைபெற்று வரும் பார்டர்-கவாஸ்கர் டிராபி போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வருகிறது.

இதில், ஏற்கெனவே நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில், 1 டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், தொடரை கைப்பற்றுவதோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கும் தகுதி பெற்றுவிடும்.

இந்நிலையில் இந்திய அணிக்கு இந்த டெஸ்ட் தொடர் மிக முக்கியமானது மட்டுமில்லாமல், ஆஸ்திரேலிய அணி தொடரை சமன் செய்ய போராட வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.

முன்னதாக 2 டெஸ்ட் போட்டிகள் நடந்த மைதானமானது சுழற்பந்துக்கு மிகவும் சாதகமாக அமைந்திருந்தது. அதைத்தொடர்ந்து, நாளை நடக்கவிருக்கும் போட்டியானது, இந்தூர் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆடுகளமானது பேட்டிங், சுழற்பந்துவீச்சு இரண்டுக்குமே சாதகமான ஆடுகளமாக பார்க்கப்படுகிறது.

தற்போது இந்திய அணியைப் பொறுத்தவரை வெற்றி பெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருந்தாலும், இந்திய அணியில் சில வீரர்களின் தாக்கம் குறைவாகவே காணப்படுகிறது. அதிலும் கேஎல் ராகுல் தொடர்ந்து மோசமாக விளையாடி வந்தாலும், அவர் மீது நிர்வாகம் இன்னும் நம்பிக்கை வைத்துள்ளதால், இந்த டெஸ்ட்டில் அவர் ரோஹித் சர்மாவுடன் களமிறங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும், இவரை நீக்கவிட்டு சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஸ்ரேயாஸ் ஐயரும் அவரது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில்தான் உள்ளார். விராட் கோலி, புஜாரா இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் 3வது டெஸ்ட்டில் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்திய பிளேயின் 11 அணியில் :

1. ரோகித் சர்மா, 2. கேஎல் ராகுல் / சுப்மன் கில், 3. புஜாரா, 4. விராட் கோலி, 5. ஸ்ரேயாஸ் ஐயர், 6. கேஎஸ் பரத், 7. ஜடேஜா, 8. அஸ்வின், 9. அக்சர் பட்டேல், 10. முகமது ஷமி, 11. முகமது சிராஜ்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com