டாப் 10 உலக பணக்கார கிரிக்கெட்டர்கள் பட்டியல் வெளியீடு... முதலிடத்தில் இவரா? பெயரைப் பார்த்து அரண்டு போன ரசிகர்கள்!

டாப் 10 உலக பணக்கார கிரிக்கெட்டர்கள் பட்டியல் வெளியீடு... முதலிடத்தில் இவரா? பெயரைப் பார்த்து அரண்டு போன ரசிகர்கள்!

உலக பணக்கார கிரிக்கெட்டர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், முதலிடத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்டின் பெயர் இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கால்பந்து போட்டிக்கு அடுத்தபடியாக உலக அளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு கிரிக்கெட். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து என பல நாடுகளிலும் ரசிகர்களால் கவரப்பட்ட விளையாட்டு என்றுதான் கூறவேண்டும்.

அதற்குத் தோதுவாக, டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி, T20, IPL என கணக்கில்லாமல் நாள்தோறும் ரசிகர்களை பரபரப்பாகவே வைத்து வருகிறது. அதன் காரணமாக, பல நிறுவனங்களும் தங்களது ப்ராடக்ட் விளம்பரங்களுக்கு கிரிக்கெட் வீரர்களையே நடிக்க வைத்து வருகின்றனர். இதனால் இவர்களது வருமானமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் சில கிரிக்கெட் வீரர்கள் சொந்தமாக நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர்.

அந்தவகையில், சிஇஓவேர்ல்ட் டாப் 10 உலக பணக்கார கிரிக்கெட்டர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் 380 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். இதில் ஒரு சிறிய தவறும் நிகழ்ந்துள்ளது. அதவாது ஆடம் கில்கிறிஸ்ட் என்ற பெயரில் தொழிலதிபர் ஒருவரும் உள்ளார். F45 என்ற ஜிம் கம்பெனியின் நிறுவனரான இவரது சொத்து மதிப்பும் இணைக்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மற்றபடி, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் தெண்டுல்கர் 170 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். 2வது இடத்தில் எம்.எஸ்.தோனி 115 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடனும், இவருக்கு அடுத்தபடியாக விராட் கோலி 112 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 3வது இடத்திலும் உள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து, RT Ponting: $75m, JH Kallis: $70m, BC Lara: $60m, V Sehwag: $40m, Yuvraj Singh: $35m, Steve Smith: $30m சொத்துமதிப்புடன் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com