உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் கேரி இருவருக்கும் பரிசளித்த விராட் கோலி! என்ன பரிசு தெரியுமா?

உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் கேரி இருவருக்கும் பரிசளித்த விராட் கோலி! என்ன பரிசு தெரியுமா?

சமீபத்தில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி 2023 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றதைத் தொடர்ந்து, விராட் கோலி ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த உஸ்மான் கவாஜா மற்றும் அலெக்ஸ் கேரி இருவருக்கும் பரிசு ஒன்றை அளித்த நிலையில், அதுசம்பந்தமான வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

4 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட நிலையில், 2-1 என்ற கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

அதிலும் கடைசி டெஸ்ட் போட்டியில் இரு அணிகளுமே தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையல், கடைசி டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது.

அந்த கடைசி டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில், ஆஸ்திரேலிய அணி சார்பாக உஸ்மான் கவாஜா 180 ரன்களும், அலெக்ஸ் கேரி 114 ரன்களும் எடுத்தனர். அதேபோல் இந்திய அணியில் விராட் கோலி 186 ரன்களும், சுப்மன் கில் 128 ரன்களும் எடுத்தனர்.

தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்களான உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் கேரி ஆகிய இருவருக்கும் விராட் கோலி தனது ஜெர்சியை பரிசாக அளித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

டெஸ்ட் தொடர் தற்போது முடிந்துள்ள நிலையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் வரும் வெள்ளியன்று தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com