ஓய்வு பெறும் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா சொன்ன பெண்களின் வெற்றிக்கான முதல்படி என்ன?

ஓய்வு பெறும் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா சொன்ன பெண்களின் வெற்றிக்கான முதல்படி என்ன?

செவ்வாயன்று துபாயில் நடந்த தனது தொழில்முறை டென்னிஸ் வாழ்க்கையின் இறுதிப் போட்டியில் சானியா மிர்ஸா, தனது முதல் சுற்றில் மகளிர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் உடன் இணைந்து ரஷ்ய ஜோடியான வெரோனிகா குடெர்மெடோவா மற்றும் லியுட்மிலா சாம்சோனோவாவை எதிர்கொண்டார்.

4-6, 0-6 என்ற செட் கணக்கில் போட்டியின் முதல் சுற்றிலேயே வெற்றி பெறத் தவறி போட்டியிலிருந்து வெளியேறினார் சானியா. இந்தப் போட்டியே சானியா மிர்ஸாவின் 20 ஆண்டுகால டென்னிஸ் வாழ்க்கையின் இறுதிப் போட்டியாக அமைந்து விட்டது.

கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் தொழில்முறை டென்னிஸ் வீரங்கனையாக இந்தியாவுக்காக விளையாடி வரும் சானியா, தாம் டென்னிஸிலிருந்து ஓய்வு பெறப்போவதாக கடந்தாண்டு அறிவித்திருந்தார். இவர் இதுவரை, தன்னுடைய டென்னிஸ் வாழ்க்கையில் மகளிர் இரட்டையர் பிரிவில் முறையே 2015 ஆம் ஆண்டில் இரண்டு, 2016 ஆம் ஆண்டில் ஒன்று என மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களும், கலப்பு இரட்டையர் பிரிவில் முறையே 2009, 2012, 2014 ஆம் ஆண்டுகளில் மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுமாக மொத்தம் 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கிறார்.

இவர் கடந்த 2010 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயீப் மாலிக்கைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று உண்டு.

சானியா மிர்ஸாவின் புகழ்மிக்க டென்னிஸ் வாழ்க்கை இன்றுடன் முடிகிறது,ஆனாலும் தாம் ஓய்வு பெறப்போவதை ஒட்டி செய்தி ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் பகிர்ந்து கொண்ட முக்கியமான விஷயங்களில் ஒன்று இன்றைய இளம்பெண்களுக்கானது. அவர்கள் எந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு இது பொருத்தமாகவே இருக்கும். ‘இளம் பெண்களிடம் சொல்ல விரும்புகிறேன், நீங்கள் விரும்பியதைச் செய்ய முடியாது என்று எவர் ஒருவரையும் உங்களிடம் சொல்ல அனுமதிக்காதீர்கள்’

அது தான் உங்களது வெற்றிக்கான முதல்படி என்கிறார் சானியா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com