புகழ் மிக்க நிட்டோ ஏடிபி கோப்பையை வெல்லப் போகும் டென்னிஸ் வீரர் யார்?

புகழ் மிக்க நிட்டோ ஏடிபி கோப்பையை வெல்லப் போகும் டென்னிஸ் வீரர் யார்?

நவம்பர் 13 முதல் 20 வரை இத்தாலியில் டுரின் நகரில் நடைபெறவுள்ள 'ஏடிபி' இறுதிப் போட்டி, உலகளாவிய டென்னிஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

'ஏடிபி' என்றால் என்ன? 

கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் மற்றும் பிற அனைத்து தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளும் 1968 க்கு முன்பு மட்டுமே அமெச்சூர் போட்டியாளர்களுக்கு திறக்கப்பட்டன. 1972 ஆம் ஆண்டில், ஃபாரஸ்ட் ஹில்ஸில் நடந்த யுஎஸ் ஓபனில், முன்னணி வல்லுநர்கள் இணைந்து டென்னிஸ் தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கத்தை உருவாக்கினர் (Association of Tennis Professionals - ATP).

'ஏடிபி' அமைப்பின் குறிக்கோள்

ஆண்கள் தொழில்முறை டென்னிஸின் உலகளாவிய ஆளும் குழுவாக,  ஏடிபி இன் நோக்கம் டென்னிஸுக்கு சேவை செய்வதாகும். ஆஸ்திரேலியாவில் ஜனவரி மாதம் துவங்கும்  ஏடிபி கோப்பை முதல் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியா வரை, ஏடிபி மாஸ்டர்ஸ் 1000, 500 மற்றும் 250 நிகழ்வுகள் மற்றும் கிராண்ட் ஸ்லாம்களில் போட்டியிடும் அனைத்து தொழில்முறை டென்னிஸ் விளையாட்டு வீரர்களும் போட்டியிடுவது நல்ல ஏடிபி தரவரிசைக்கு தான். அவர்களது இறுதி குறிக்கோள் நிட்டோ ஏடிபி இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு கோப்பையை ஜெயிப்பது. 

இது இத்தாலியின் டுரினில் நடைபெறும் மதிப்புமிக்க சீசன் இறுதிப் போட்டியாகும். உலகின் சிறந்த எட்டு தகுதி பெற்ற ஒற்றையர் ஆட்டக்காரர்கள் மற்றும் இரட்டையர் அணிகள் மட்டுமே இடம்பெறும் இந்த போட்டியானது, டென்னிஸில் இறுதி சாதனையான ஏடிபி உலக நம்பர் 1-ன் அதிகாரப்பூர்வ மகுடத்தை ஆண்டு இறுதியில் சூட்டுகிறது.

இறுதிச் சுற்றில் தேர்வான ஒற்றையர்கள்

நோவக் ஜோகோவிச் விம்பிள்டனில் பெற்ற வெற்றியின் விளைவாக கிராண்ட் ஸ்லாம் தகுதி விதியின் கீழ் டுரினில் இறுதிப் போட்டிக்கு நேரடி தகுதி பெற்றார். கார்லோஸ் அல்கராஸ், ரஃபேல் நடால், காஸ்பர் ரூட், ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் மற்றும் டேனியல் மெட்வடேவ், ஃபெலிக்ஸ் ஆகர் அலியாஸ்ஸிமே  மற்றும் ஆண்ட்ரே ரப்ளேவ் ஆகியோரும் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றனர். தற்போதைய நம்பர் 1 கார்லோஸ் அல்கராஸ் காயம் காரணமாக நிகழ்விலிருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் டெய்லர் பிரிட்ஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இந்த போட்டி நவம்பர் 13 ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நவம்பர் 20 வரை நீடிக்கும், அப்போது சாம்பியன்ஸுக்கெல்லாம் சாம்பியன் பட்டம் சூட்டப்படும்.

கோப்பை யாருக்கு ?

ரஃபேல் நடால் மற்றும் நோவக் ஜோகோவிச் இருவரும் ஒரே நிட்டோ ஏடிபி பைனல்ஸ் குழுவில் இடம்பெற மாட்டார்கள் என்று வியாழக்கிழமை டிராவில் தெரியவந்துள்ளது.

நடால் ஐந்தாவது முறையாக ஆண்டு இறுதி சாம்பியன்ஷிப்பில் முதலிடம் பிடித்தார். இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் ரோலண்ட் கரோஸ் சாம்பியனான ஸ்பெயின் வீரர், சீசன் இறுதிக் கோப்பையை முதல்முறையாக கைப்பற்ற முயற்சிக்கிறார். காஸ்பர் ரூட், பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம் மற்றும் டெய்லர் ஃபிரிட்ஸ் ஆகியோருடன் நடால் 'பச்சை' குழுவில் தேர்வாகியுள்ளார்.

ஏழாம் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் இம்முறை வரலாறு படைக்க முயற்சிப்பார். ஐந்து முறை சாம்பியனான ரோஜர் பெடரரின் ஆறு நிட்டோ ஏடிபி பைனல்ஸ் பட்டங்களை சமன் செய்ய அவரால் முடியும். ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ஜோகோவிச், டேனியல் மெட்வெடேவ் மற்றும் ஆண்ட்ரே ரப்ளேவ் ஆகியோர் 'சிவப்பு' குழுவில் தேர்வாகி உள்ளனர்.

மூன்று முன்னாள் நிட்டோ ஏடிபி வெற்றியாளர்கள் இம்முறை களத்தில் உள்ளனர். ஜோகோவிச், மெட்வெடேவ் மற்றும் சிட்சிபாஸ். இந்நிலையில் கோப்பை யாருக்கு என்பதை நாம் பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com