இறுதிப்போட்டியில் கோப்பை யாருக்கு ? குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் பலப்பரீட்சை!

இறுதிப்போட்டியில் கோப்பை யாருக்கு ? குஜராத் டைட்டன்ஸ் vs  சென்னை சூப்பர் கிங்ஸ் பலப்பரீட்சை!

ஐபிஎல் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி மழை பெய்ததன் காரணமாக நாளை ஒத்தி வைக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது . பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மழை காரணமாக பாதிக்கப்பட்ட ஐபிஎல் இறுதி ஆட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று நடைபெற இருந்த குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், உடனான இறுதி போட்டி, மழை காரணமாக தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை தொடர்ந்ததால் இறுதி போட்டி ஒத்தி வைக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து ரிசர்வ் டே விதிப்படி இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றிருந்தன.

முதலாவது குவாலிஃபயர் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

அடுத்ததாக நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோதியது. இப்போட்டியில் 81 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று குவாலிஃபயர் 2-க்கு தகுதி பெற்றது.கடந்த மே 26 ஆம் தேதி நடைபெற்ற குவாலிஃபயர் 2-ல் குஜராத் டைட்டன்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இதையடுத்து பரபரப்பான இறுதிப்போட்டி குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பலத்த மழை காரணமாக போட்டி ஒத்தி வைக்கப்பட்டு இன்று நடைபெற உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com