டிரினிடாடில் 3வது ஒருநாள் போட்டி: தொடரை கைப்பற்றுமா இந்தியா?

ரோகித் ஷர்மா
ரோகித் ஷர்மா

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒரு நாள் சர்வதேச போட்டி இன்று டிரினிடாடில் பிரையன் லாரா கிரிக்கெட் அகாதெமி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் கடைசியாக மேற்கிந்திய தீவுகள் அணி 2006 இல் தொடரை வென்றது இங்குதான்.

இரண்டாவது ஒரு நாள் சர்வதேச போட்டியை மேற்கிந்தியத் தீவுகள் அணி வென்றது. இன்றைய போட்டியிலும் வெல்லும் நம்பிக்கையில் அந்த அணி இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் இடம்பெற்றால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு போட்டி கடுமையானதாக இருக்கும்.

எனினும் மேற்கிந்திய தீவுகள் அணியினர் தங்களது நிலையை உணர்ந்துள்ளனர். ஒருவேளை இந்திய அணியில் ரோகித் மற்றும் கோலி ஆடாத நிலையில் இன்றைய ஆட்டம் சுவாரஸ்யமாகவே இருக்கும்.

முதல் ஒருநாள் போட்டியின்போது கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், இந்தியா ஒரு நாள் போட்டியில் இதர வீர்ர்களையும் ஆடவைத்து சோதித்து பார்க்க நினைக்கிறது. ஆனாலும், வெற்றிதான் எங்கள் இலக்கு என்று தெரிவித்திருந்தார்.

முதல் ஒரு நாள் சர்வதேச போட்டி கடந்த ஜூலை 27 இல் நடைபெற்ற போது இந்தியாவின் கை ஓங்கியிருந்தது. இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்ஸ்மென்கள் திணறினர். குறிப்பாக குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா இருவரும் சிறப்பாக பந்து வீசி 7 விக்கெட்டுகளை எடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் அணி 114 ரன்களுக்கு சுருண்டது.

இந்திய அணியில் ரோகித், கோலி இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக் களம் இறங்காத நிலையில் இந்திய அணிக்கு சிறிது சரிவு ஏற்பட்டது. ஆனால், ரோகித் சர்மா 7 வது ஆட்டக்காரராக களம் இறங்கி வெற்றியைத் தேடித்தந்தார்.

பார்படாஸில் நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவை 181 ரன்களில் வீழ்த்தியது. மோட்டீ மற்றும் ஷெப்பர்டு இருவரும் தலா மூன்று விக்கெட்டுகள் எடுத்தனர்.

மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றியை கைப்பிடிப்பது சவாலாகவே இருந்தது. 53 ரன்களில் விக்கெட் ஏதும் விழாமல் ஆடியவர்கள் 91 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தனர். கியாஸி கார்டி, ஹோப்புடன் இணைந்து சிறப்பாக ஆடி 91 ரன்கள் சேர்த்தனர். பின்னர் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வென்றது.

இந்த நிலையில் மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி டிரினிடாடில் நடைபெறுகிறது. இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட், முன்னணி ஆட்டக்கார்ர்களுகே மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுக்காமல் இரண்டாம் நிலை ஆட்டக்கார்ர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதன் மூலம் ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை போட்டிகளுக்கு அணி வீர்ர்களை தேர்ந்தெடுக்க வசதியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஒரு பக்கம் இந்திய அணி தனது இதர வீர்ர்களின் ஆட்டத்தை சோதித்து பார்க்க நினைத்தாலும் தொடரை வெல்வதில் குறியாக இருக்கிறதா என்கிற கேள்வியும் எழுகிறது. பரிசோதனை, தொடர் இரண்டிலும் இந்தியா வெற்றிபெறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com