கோப்பையை வெல்லுமா தமிழ் தலைவாஸ்?

கோப்பையை வெல்லுமா தமிழ் தலைவாஸ்?

ந்தியா முழுவதுமிலிருந்து பன்னிரெண்டு அணிகளைக் கொண்ட ஒன்பதாவது புரோ கபடி லீக் போட்டிகள் நவம்பர் மாதம் 7ம் தேதி பெங்களூருவில் தொடங்கியது. ஆரம்பத்தில் மிகவும் சொதப்பி வந்த தமிழ் தலைவாஸ் அணி, தற்போது வேகமெடுத்து, அனைத்து அணிகளையும் தமது விறுவிறுப்பாக ஆட்டத்தினால் மிரட்டி வருகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் பவன் ஷெராவத், காயம் காரணமாக முதல் ஆட்டத்திலேயே வெளியேறியதுடன், இத்தத் தொடர் முழுவதும் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அந்த அணியின் பயிற்சியாளர் ஜெ.உதயகுமாரும் அணியை வழிநடத்துவதிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதுபோன்ற நிகழ்வுகள் தமிழ் தலைவாஸ் ரசிகர்களுக்கு பெருத்த வருத்தத்தைத் தந்தது. இந்த நிலையில்தான் அந்த அணிக்கு புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றார் அஷன்குமார். எதிர்பாராத விதமாக புதிதாக கேப்டனாக வந்த சாகர் ரதியும் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்து வரும் போட்டிகளில் இருந்து விலகினார். இது, தமிழ் தலைவாஸ் அணிக்கு அடி மேல் அடியாக இருந்தது. பயிற்சியாளர் அஷன்குமாரின் அமைதி மற்றும் பொறுப்பான செயல்பாடுகளால் தமிழ் தலைவாஸ் அணி மிகவும் உற்சாகமடைந்ததுடன், அடுத்து வந்த ஆட்டங்களில் தங்களது விறுவிறுப்பைக் காட்டத் தொடங்கியது. அதுமட்டுமின்றி, தொடர் வெற்றிகளையும் குவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ரு வெற்றி பெற்றால் புரோ கபடி வரலாற்றில் முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில், தமிழ் தலைவாஸ் அணி கடந்த புதன்கிழமை உ.பி.யோத்தாஸ் அணியை எதிர்கொண்டது. அந்த அணியின் நட்சத்திர வீரர் பர்தீப் நர்வாலுக்கு அந்த ஆட்டத்தில் ஓய்வு கொடுக்கப்பட்டது. அதனால் அவர் அந்த ஆட்டத்தில் ஆடாதது தமிழ் தலைவாஸ் அணியின் வெற்றியை மிகவும் எளிதாக்கியதோடு, பிளே ஆஃப் சுற்றுக்கும் அந்த அணியை முதல் முறையாக இட்டுச் சென்றது.

பயிற்சியாளர் விலகல், இரண்டு கேப்டன்கள் காயம் என தமிழ் தலைவாஸ் அணிக்கு அடுத்தடுத்து பல்வேறு தடைகள் வந்தபோதிலும் அதையெல்லாம் உடைத்தெறிந்து தொடர் வெற்றிகளை ருசித்து வருகிறது அந்த அணி.

புரோ கபடி வரலாற்றில் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட்டு வரும் நரேந்தர் கண்டோலா மற்றும் அஜின்கியா பவார் ஆகியோரின் பட்டையைக் கிளப்பும் ஆட்டத்தினால் இறுதி ஆட்டத்தில் கோப்பையை வெல்லும் சூழல் கூட ஏற்படலாம் என கபடி ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. கோப்பையை வெல்லுமா தமிழ் தலைவாஸ்?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com