விம்பிள்டன் 2023: ஜோகோவிச் கனவை தகர்த்தார் அல்காரஸ்!

வரலாறு படைத்தார் வான்ட்ரோஸோவா
விம்பிள்டன் 2023: ஜோகோவிச் கனவை தகர்த்தார் அல்காரஸ்!

விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஆடவர் பிரிவில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றி செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை, ஸ்பெயின் நாட்டு வீர்ர் கார்லோஸ் அல்காரஸ் வீழ்த்தி பட்டத்தை வென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் விம்பள்டன் போட்டியில் முதல் முறையாக பட்டத்தை வென்று அல்காரஸ் வரலாற்று சாதனைப்படைத்துள்ளார். இதன் மூலம் 8-வது முறையாக விம்பிள்ட்ன் பட்டம் வெல்லும் ஜோகோவிச் கனவு அவர் தகர்த்துள்ளார்.

லண்டனில் நடைபெற்றும் வரும் விம்பிள்டன் 2023ம் ஆண்டுக்கான ஆடவர் ஒற்றையர் பிரிவின் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் உலகின் நெம்பர் 1 வீர்ரான நோவக் ஜோகோவிச்சுக்கும் கார்லோஸ் அல்காரஸ்க்கும் இடையில் நடைபெற்ற முதல் செட் ஜோகோவிச்சுக்கு சாதமாக இருந்தது. 5-0 என்று முன்னிலையில் இருந்த ஜோகோவிச், அதிரடி ஆட்டத்தால் 1-6 என்ற செட் கணக்கில் முன்னிலை பெற்றார்.

ஆனால், இரண்டாவது செட்டில் அலாகரஸ், சுதாரித்து ஆடி வெற்றியை தனதாக்கிக் கொண்டார். மூன்றாவது செட்டிலும் அவரது கை ஓங்கியிருந்தது. இறுதியில் அல்காரஸ் 1-6, 7-6, 6-1, 3-6, 6-4 என்ற கணக்கில் ஜோகோவிச்சை வென்று பட்டத்தை கைப்பற்றினார்.

விம்பிள்டனில் பட்டம் வென்ற அல்காரஸுக்கு ரூ.25 கோடியும், இரண்டாவது இடம்பெற்ற ஜோகோவிச்சுக்கு ரூ.12 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது. இருவரிடையே ஆட்டம் 4 மணி நேரம் 42 நிமிடங்கள் நீடித்தது. இந்த வெற்றியின் மூலம் விம்பிள்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மூன்றாவது இளம் வீர்ர் எனும் சாதனையை அல்காரஸ் பெற்றுள்ளார். 20 வயதான ஸ்பெயின் வீர்ர் அல்காரஸ் கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

விம்பிள்டன் பட்டம் வென்றுள்ள மூன்றாவது ஸ்பெயின் வீர்ர் கார்லோஸ் அல்காரஸ். இதற்கு முன் மானுவல் சன்டானா (1966) மற்றும் ராஃபேல் நடால் (2008, 2010) ஆகியோர் பட்டம் வென்றுள்ளனர்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் செக். குடியரசு வீராங்கனை மார்கெடா வான்ட்ரோஸோவா பட்டம் வென்றார். இதன் மூலம் 60 ஆண்டுகளில் தரவரிசை இல்லாமல் பட்டம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையையும் அவர் நிகழ்த்தியுள்ளார்.

இதன் மூலம் முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ஆப்பிரிக்க-அரேபிய வீராங்கனை என்ற சாதனை படைக்க வேண்டும் என்ற ஆன்ஸ் ஜபரின் கனவு தகர்ந்தது. மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் செக். குடியரசின் மார்கெடா வான்ட்ரோஸோவாவும் டுனீசியாவின் ஆன்ஸ் ஜபரும் மோதினர். தர வரிசையில் ஆன்ஸ் ஜபர் 6-வது இடத்திலும் வான்ட்ரோஸோவா 42 வது இடத்திலும் உள்ளனர்.

முதல் செட்டியில் ஜபர் முன்னிலை பெற்ற நிலையில், சுதாரித்து ஆடிய வான்ட்ரோஸோவா 5-4 என முன்னிலை பெற்றதுடன் 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை வென்றார். இரண்டாவது செட்டில் ஜபர் 3-1 என முன்னிலை பெற்றாலும், ஜபர் செய்த சில தவறுகளை தனக்கு சாதமாக்கிக் கொண்ட வான்ட்ரோஸோவா 6-4 என இரண்டாவது செட்டையும் தம் வசப்படுத்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

வான்ட்ரோஸோவா வென்றுள்ள முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும் இது. கடந்த 2019 பிரெஞ்ச் ஓபனில் ஆஷ்லி பர்டியிடம் இறுதி ஆட்டத்தில் தோற்றிருந்தார் அவர். இதுவரை ஜானா நவோட்னா, பெட்ரா குவிட்டோவா ஆகிய இரு செக் குடியரசு வீர்ர்கள் விம்பிள்டன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com