மகளிர் உலகக் கோப்பை 2023 : அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா!
தற்போது நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அயர்லாந்து அணியை 5 ரன்கள் வித்தியாத்தில் வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி அயர்லாந்து அணியை நேர்கொண்டது. இதில் டாஸை வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய நிலையில், 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியைப் பொறுத்தவரை, ஸ்மிரிதி மந்தனா அதிரடியாக விளையாடி 56 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில் 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து அயர்லாந்து அணி களமிறங்கி விளையாடிய நிலையில், 8.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்த நிலையில், மழை குறுக்கிட்டது. இந்நிலையில், டிஎல்எஸ் முறைப்படி முடிவு அறிவிக்கப்பட்ட நிலையில், 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 3 போட்டிகளில் வெற்றிபெற்று 6 புள்ளிகளுடன், பி பிரிவில் 2வது இடத்தைப் பெற்று, இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.