உலகக் கோப்பை இந்திய அணியில் குல்தீப், ஜடேஜாவுக்கு அதிக வாய்ப்பு?

குல்தீப், ஜடேஜா
குல்தீப், ஜடேஜா

2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற விவாதம் நடந்து வருகிறது. சமீபகாலத்தில் குல்தீப் யாதவும், ரவீந்திர ஜடேஜாவும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால், எற்கெனவே யஜுவேந்திர சாஹல் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருக்கையில் இதில் யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் தேர்வுக்குழுவினருக்கு தர்மசங்கடமான நிலை ஏற்படும்.

இடதுகை சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ், தனித்திறமை வாய்ந்தவர். லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆட்டத்தின் போக்கை மாற்றும் வல்லமை படைத்தவர். அவரது பந்து வீச்சு நிச்சயம் எதிரணியினருக்கு கிலியை ஏற்படுத்தும். விக்கெட்டுகளை சாய்க்கும் திறன் இருந்தும் அவர் அணியில் தொடர்ந்து இடம்பெறாதது ஏன் என்று தெரியவில்லை.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் குல்தீப் தமது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். மூன்று ஓவர்களில் 6 ரன்கள் மட்டும் கொடுத்து அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் வீசும் பந்து தரையில் பட்டு சுழன்று மீண்டும் எழும்போது அதை அடிக்க மேற்கிந்திய அணி வீர்ர்கள் திணறியது அனைவருக்கும் தெரியும். இவ்வளவு திறமைகள் இருந்த போதிலும் அவர் இந்திய அணியில் பெறுவது ஒரு சவாலாகவே இருந்து வருகிறது. பல சந்தர்ப்பங்களில் வாய்ப்பிருந்தும் அவர் அணியில் இடம்பெறவில்லை.

எனினும் கடந்த ஒன்பது ஒருநாள் சர்வேசப் போட்டிகளில் அவர் மன உறுதியுடன் சிறப்பாக பந்து வீசி 19 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். உலக கோப்பை அணியில் அவர் இடம்பெற்று முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரவீந்திர ஜடேஜாவையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது. ஆல்ரவுண்டரான அவர் பலமுறை அவர், தனது திறமையை நிரூபித்துள்ளார். பேட்டிங், இடது கை சுழற்பந்து வீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் அவர் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். தற்போதைய சூழலில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் அவர் இடம்பெற 100 சதவீத வாய்ப்புகள் உள்ளன.

2019 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் குல்தீப், யஜுவேந்திர சாஹல் இருவரும் தங்கள் திறமையான பந்துவீச்சை நிரூபித்துள்ளனர். இருவரும் சேர்ந்து மூன்று போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுள்ளனர். 2023 இல் சாஹல் இதுவரை மூன்று ஒரு நாள் போட்டியில் மட்டும் விளையாடியுள்ள நிலையில் ஜடேஜா 9 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதுவே அவருக்கு சாதகமான ஒன்றாகும்.

சாஹலின் சுழற்பந்துவீச்சு எதிரணி பேட்ஸ்மெகளுக்கு ஒரு காலத்தில் கிலியை ஏற்படுத்தினாலும் இப்போது அவர் ஃபார்மில் இல்லை. அப்படியே பந்து வீசினாலும் அதிக ரன்கள் கொடுத்தே விக்கெட் எடுக்கிறார். எனவே அவர் அணியில் இடம்பெறுவது சந்தேகத்தை எழுப்பினாலும் முன்கூட்டியே அவர் இடம்பெறமாட்டார் என உறுதியாகச் சொல்ல முடியாது.

இதனிடையே அஸ்வின் திறமையையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது. இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டியில் அவர், தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு நல்ல அனுபவமும் புத்திசாலித்தனமும் இருக்கிறது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அவர் இடம்பெறாததால் உலக கோப்பை போட்டியிலும் அவர் இடம்பெற மாட்டார் என்றே சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com