எபோலா வைரஸ்
எபோலா வைரஸ்

எபோலா வைரஸ் பரவல்: உகாண்டாவில் லாக் டவுன்!

Published on

எபோலா நோய்த் தொற்று காரணமாக உகாண்டாவில் இரண்டு முக்கிய நகரங்களுக்கு லாக்டவுன் அறிவிக்கப் பட்டுள்ளது.

உகாண்டாவில் எபோலா நோய்த் தொற்று மிகவும் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் முபேந்தா, கசண்டா ஆகிய முக்கிய நகரங்களில் மூன்று வாரம் லாக்டவுன் அமல்படுத்தப் பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் யோவெரி முசிவேனி அறிவித்துள்ளார்.

இந்த நகரங்களில் இருக்கும் கேளிக்கை விடுதிகள், இரவு விடுதிகள், வழிபாட்டுத் தலங்கள், பார்கள் போன்ற அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதுவரை எபோலா நோய்த் தொற்று தாக்கத்தின் காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது அங்கு இருக்கும் முக்கிய நகரங்களில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு
தொற்று பாதிப்பு

உகாண்டாவின் கடந்த செப்டம்பர் மாதம் இந்த தொற்று பாதிப்பு குறித்துக் கண்டறியப்பட்டது. தற்போது வரை இதற்கான விழிப்புணர்வு குறித்து பொதுமக்களுக்கு அரசு அறிவித்து வருகிறது. எபோலா நோய்த் தொற்றுக்கு லாக்டவுன் தேவைப்படாது என அந்நாட்டின் அதிபர் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார்.

ஆனால் தற்போது நோய்த் தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ள காரணத்தினால் இரண்டு முக்கிய நகரங்களுக்கு லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொற்று மேலும் மற்ற நகரங்களுக்குப் பரவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com