புதினை கொல்ல வந்த உளவு ட்ரோன்!

புதினை கொல்ல வந்த உளவு ட்ரோன்!

அதிபர் விளாதிமிர் புதினை கொல்ல முயற்சித்ததாக உக்ரைன் மீது ரஷியா குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த தாக்குதல் முயற்சியில் உக்ரைன் நாட்டின் இரண்டு உளவு டிரோன் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.

எனினும் இந்த தாக்குதல் சம்பவத்தில் புதினுக்கு எந்த ஆபத்தும் இல்லை. கிரெம்ளின் மாளிகைக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. இது திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதலாகும் என்றும் ரஷியா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள ரஷ்ய வெளியுறவுத் துறை, "உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஆளில்லாத இரண்டு உளவு விமானங்கள் ரஷ்ய அதிபர் வசிக்கும் கிரெம்ளின் மாளிகை நோக்கி வந்துள்ளன. எனினும் அவை சுட்டுவீழ்த்தப்பட்டன. இந்த தாக்குதல் சம்பவத்தின்போது புதின் அதிபர் மாளிகையில் இல்லாததால் உயிர்தப்பினார் என ரஷியா கூறியுள்ளது.

இதனிடையே “இந்த தாக்குதலுக்கும் உக்ரைனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதன் மூலம் போர் முடிவுக்கு வந்துவிடாது” என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியின் செய்தித் தொடர்பாளர் மிகையிலோ போடாலாயக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விடியோ ரஷ்ய சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. அதில் அதிபர் மாளிகை பகுதி புகைமண்டலமாக காட்சி அளிப்பதை காணமுடிகிறது. அதே நேரத்தில் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்படும் காட்சியும் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இந்த விடியோக்கள் உண்மைதானா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

கிரெம்ளின் மாளிகையை குறிவைத்து டிரோன்கள் பறந்த செய்தி வெளியானதை அடுத்து அதிபர் மாளிகையைச் சுற்றி அதிகாரபூர்வமற்ற ட்ரோன்கள் பறப்பதற்கு ரஷிய மேயர் செர்ஜி சோபியானின் தடைவிதித்துள்ளார்.

இதனிடையே மே 9ம் தேதி திட்டமிட்டபடி, ஹிட்லரின் நாஜி படைகளை சோவியத் வென்ற வெற்றிதின கொண்டாட்ட அணிவகுப்பு ரஷ்யாவில் செஞ்சதுக்கத்தில் நடைபெறும் என்று ரஷ்ய அதிகர் மாளிகை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com