இந்தியாவிற்கு எதிரான எந்த அச்சுறுத்தலுக்கும் இலங்கையை தளமாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது- ரணில் விக்ரமசிங்கே!

இந்தியாவிற்கு எதிரான எந்த அச்சுறுத்தலுக்கும் இலங்கையை தளமாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது- ரணில் விக்ரமசிங்கே!
Published on

இந்தியாவுக்கு எதிரான தளமாக இலங்கையை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என ரணில் விக்ரமசிங்கே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவற்றுக்கு நம் அண்டை நாடான இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே சமீபத்தில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். இரு தினங்களுக்கு முன், அவர் இலங்கை திரும்பினார்.தன் அரசு முறை சுற்றுப்பயணம் குறித்து ஊடகங்களிடம் பேசிய ரணில் விக்ரமசிங்கே கூறியதாவது:...

“அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன ராணுவம் பயன்படுத்துவதில் எந்தச் சிக்கலும் இல்லை. சீன வியாபாரிகளின் பயன்பாட்டில் அந்தத் துறைமுகம் இருந்தாலும் அதன் பாதுகாப்பு விவகாரங்களை இலங்கை அரசு கவனித்து வருகிறது.

சுமார் 1500 அண்டுகளாக சீனாவுடன் இலங்கைக்கு தொடர்பு உள்ளது. சீனாவின் ராணுவ படைத்தளம் எதுவும் இலங்கையில் இல்லை. சீனாவுடன் ராணுவ ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளவில்லை. அதுபோன்ற ஒப்பந்தம் போட அந்நாடு விரும்புவதாக தெரியவில்லை. இலங்கை எப்போதும் நடுநிலை நாடாக இருக்கும். இந்தியாவுக்கு எதிரான அச்சுறுத்தலுக்கு இலங்கையை தளமாக பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என ரணில் விக்ரமசிங்கே கூறினார்.

India china
India china

இலங்கை ஒரு நடுநிலை நாடு, ஆனால் இந்தியாவிற்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் இலங்கையை ஒரு தளமாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்பதையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார் ரணில் விக்ரமசிங்கே.

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, சீனாவின் 'பாலிஸ்டிக்' ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான 'யுவான் வாங் 5' ஐ ஹம்பன் தோட்டா துறைமுகத்தில் நிறுத்த கடந்த ஆண்டு இலங்கை அனுமதித்தது . இது குறித்து இலங்கை - இந்தியா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், ரணில் விக்ரமசிங்கே இவ்வாறு பேசியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com