+2 படித்திருந்தால் போதும்..! 7565 Constable காலியிடங்கள் அறிவிப்பு – சம்பளம்: Rs.21,700..!

POLICE JOB VACANCY
POLICE JOB VACANCYImg Credit: TOI
Published on

நிறுவனம் : Staff Selection Commission (SSC)

வகை : மத்திய அரசு வேலை

காலியிடங்கள் : 7565

பணியிடம் : இந்தியா முழுவதும்

ஆரம்ப நாள் : 22.09.2025

கடைசி நாள் : 21.10.2025

மத்திய பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission – SSC) தற்போது காலியாக உள்ள 7565 கான்ஸ்டபிள் (Constable – Executive) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 21.10.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பதவி: Constable (Executive)

சம்பளம்: மாதம் Rs.21,700 முதல் Rs.69,100 வரை

காலியிடங்கள்: 7565

கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: SSC கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

CONSTABLE VACANCY
CONSTABLE VACANCY
இதையும் படியுங்கள்:
ரூ.1,00,000 உதவித்தொகை வேண்டுமா? அப்போ உடனே விண்ணப்பீங்க..!
POLICE JOB VACANCY

வயது தளர்வு:

  • SC/ST: 5 ஆண்டுகள்

  • OBC: 3 ஆண்டுகள்

  • PwBD (பொது/EWS): 10 ஆண்டுகள்

  • PwBD (SC/ST): 15 ஆண்டுகள்

  • PwBD (OBC): 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

பெண்கள், பட்டியல் சாதியினர் (SC), பட்டியல் பழங்குடியினர் (ST), முன்னாள் ராணுவத்தினர் (Ex-s) மற்றும் மாற்றுத்திறனாளிகள் (PWD) விண்ணப்பதாரர்கள்: கட்டணம் இல்லை.

Others – Rs.100/-

தேர்வு செய்யும் முறை:

  • Computer Based Examination - விண்ணப்பதாரர்களின் அறிவை சோதிக்க இந்தத் தேர்வு நடத்தப்படும்.

  • Physical Endurance & Measurement Test (PE&MT) - உடல் தகுதியை சோதிக்க இந்தத் தேர்வு நடத்தப்படும்.

  • Medical Examination - விண்ணப்பதாரர்கள் மருத்துவ ரீதியாக தகுதியானவர்களா என்பதை உறுதி செய்ய இந்த பரிசோதனை நடத்தப்படும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.10.2025

விண்ணப்பிக்கும் முறை:

SSC கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 22.09.2025 முதல் 21.10.2025 தேதிக்குள் https://ssc.gov.in/ இணையதளத்தில் சென்று “Apply” பட்டனை கிளிக் செய்து Register செய்து பின்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com