

உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், எல்லை பாதுகாப்பு படை (BSF), மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை (CISF), மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF), இந்தோ-திபெத்திய எல்லை காவல் (ITBP), சாஸ்திர சீமா பால் (SSB), செயலக பாதுகாப்பு படை (SSF), இந்த படைகளில் உள்ள காஸ்டபிள் (General Duty) பதவி மற்றும் அசாம் ரைபிள்ஸ் (AR) ரைபிள்மேன் ஆகிய பதவியில் உள்ள காலிப்பணியிடங்கள் எஸ்எஸ்சி மூலம் நிரப்பப்படுகிறது. அதன்படி, 2025-ம் ஆண்டு ஆண்கள், பெண்கள் சேர்ந்து மொத்தம் 25,487 காலிப்பணியிடங்கள் நிரப்ப விண்ணப்பம் தொடங்கியுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் பொதுவாக பத்தாம் வகுப்பு (10th) தேர்ச்சி பெற்றிருப்பதுடன், 18 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும் (அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு)..ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 31.12.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..
வேலை பிரிவு : மத்திய அரசு வேலை 2025
துறைகள் : பணியாளர் தேர்வு ஆணையம்
காலியிடங்கள் : 25487
பணிகள் : Constable (GD)
கடைசி தேதி : 31.12.2025
பணியிடம் : இந்தியா முழுவதும்
காலிப்பணியிடங்கள் :
BSF – 616 (ஆண்கள் – 524, பெண்கள் – 92)
CISF – 14595 (ஆண்கள் – 13135, பெண்கள் – 1460)
CRPF – 5490 (ஆண்கள் – 5366, பெண்கள் – 124)
SSB – 1764 (ஆண்கள் – 1764)
ITBP – 1293 (ஆண்கள் – 1099, பெண்கள் – 194)
AR – 1,706 (ஆண்கள் – 1556, பெண்கள் - 150)
SSF – 23 (ஆண்கள் - 23)
வயது வரம்பு :
01.01.2026 தேதியின்படி, கான்ஸ்டபிள் பதவிக்கு 18 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். அதிகபடியாக 23 வயது வரை இருக்கலாம். விண்ணப்பதார்கள் 02.01.2003 தேதிக்கு முன்னரும், 01.01.2008 தேதிக்கு பின்னரும் பிறந்திருக்கக்கூடாது. வயது வரம்பு தளர்வு பின்பற்றப்படும்.
கல்வித்தகுதி :
இந்த பதவிகளுக்கு 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது தளர்வு:
SC/ ST பிரிவினருக்கு: 5 ஆண்டுகள்
OBC பிரிவினருக்கு: 3 ஆண்டுகள்
PwBD (பொது/ EWS) பிரிவினருக்கு: 10 ஆண்டுகள்
PwBD (SC/ ST) பிரிவினருக்கு: 15 ஆண்டுகள்
PwBD (OBC) பிரிவினருக்கு: 13 ஆண்டுகள்
சம்பள விவரங்கள் : தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Level-3 அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். இதன்படி மாதச் சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை கிடைக்கும். இதுதவிர மத்திய அரசின் இதர சலுகைகளும் உண்டு.
தேர்வு செயல்முறை :
SSC GD கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு செயல் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கணினி வழித் தேர்வு (Computer Based Exam – CBE)
உடற்தகுதித் தேர்வு (PET & PST)
மருத்துவப் பரிசோதனை (Medical Exam)
சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification)
இந்த பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு (Computer Based Examination) மற்றும் உடற்தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு 13 வட்டார மொழிகளிலும் நடைபெறும்.
கணினி வழி தேர்வு 160 மதிப்பெண்களுக்கு 1 மணி நேர கால அளவில் நடைபெறும். இந்த தேர்வில் ஆங்கிலம் (General English), பொது அறிவு (General Awareness), திறனறிதல் (General Intelligence & Reasoning), கணிதம் (Numerical Aptitude) ஆகிய பகுதிகளில் இருந்து தலா 20 கேள்விகள் என மொத்தம் 80 கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
பெண்கள்/ST/SC/PWD விண்ணப்பதாரர்களுக்கு – இல்லை
மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100/-
கட்டண முறை: ஆன்லைன்
எப்படி விண்ணப்பிப்பது:
SSC GD கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 01.12.2025 முதல் 31.12.2025 தேதிக்குள் https://ssc.gov.in/ இணையதளத்தில் சென்று “Apply” பட்டனை கிளிக் செய்து Register செய்து பின்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.