Breaking !வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது SSLV-D2 ராக்கெட்!

Breaking !வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது SSLV-D2 ராக்கெட்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது SSLV-D2 ராக்கெட். இது இஸ்ரோவுக்கு கிடைத்த வெற்றி. எஸ்எஸ்எல்வி-டி2 ராக்கெட் 3 செயற்கைக் கோள்களுடன் ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவாண் விண்வெளி ஆய்வு நிலையத்திலிருந்து வெற்றிகரமாக இன்று விண்ணில் பாய்ந்தது. இஒஎஸ் -07 , ஜனால் -1, ஆசாதிசாட் -2 ஆகிய 3 செயற்கைக் கோள்கள் இன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது

எஸ்.எஸ்.எல்.வி டி2 ராக்கெட்டை (SSLV-D2 Rocket) இரண்டாவது முறையாக இஸ்ரோ (ISRO) இன்று காலை விண்ணில் அனுப்பபட்டது. புவி வட்ட சுற்றுப்பாதையில் 450 கிலோ உயரத்தில் வெற்றிகரமாக நிலை நிறுத்த பட்டது. இந்த ஆசாதிசாட்-2, 750 மாணவ மாணவிகளால் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த SSLV-D2 ராக்கெட் எடை குறைந்த செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த உதவும். தற்போது 3 செயற்கைக் கோள்களுடன் புவி வட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக இன்று விண்ணில் நிலை நிறுத்த பட்டது.

குறைந்த செலவில் பூமியின் தாழ்வட்டப் பாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும் வகையில் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்று இஸ்ரோ தெரிவித்தது. இது 34 மீட்டர் நீளம், 2 மீட்டர் விட்டம், 120 டன் எடை கொண்டது.

கடந்த முறை முதல் ராக்கெட்டை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி விண்ணில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அதில் ராக்கெட்டின் இரண்டாம் நிலை பிரிவின் போது போதிய திசைவேகத்துடன் எஞ்சின் செயல்படாதது தெரியவந்தது. இதையடுத்து அடுத்தகட்ட முயற்சிக்காக செயல்பாடுகள் முடுக்கி விடப்பட்டன. அதன்படி, எஸ்.எஸ்.எல்.வி டி2 ராக்கெட் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் இ.ஓ.எஸ்-07 என்ற செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com