முதல்வர் ஸ்டாலின் பேச்சு
முதல்வர் ஸ்டாலின் பேச்சு

மத்தளத்துக்கு இருபுறமும் இடி: திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் பேச்சு!

திமுக பொதுக் குழு கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நேற்று காலை நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கழக உறுப்பினர்களுக்காக உரையாற்றினார்.

நீங்கள் இருக்கும் தைரியத்தில் தான் தலைவர் பொறுப்பு ஏற்றுக் கொண்டேன். தற்போது 92 வது முறையும் உங்களின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ளேன். இது நீங்கள் எனக்கு இட்டுள்ள கட்டளை. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முறைப்படி தேர்தலை நடத்தி வருகிறோம். பொறுப்புகள் தகுதியானவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

திமுக பழுத்த மரமாக இருப்பதால் தானே கல் எறிகிறார்கள். திமுக பழுத்த மரம் மட்டுமல்ல கல் கோட்டை. வீசப்பட்ட கல்லை வைத்து கோட்டை கட்டுபவர்கள் திமுகவினர்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

அதிக மழை பெய்தாலும், மழை பெய்யாவிட்டாலும் என்னைதான் குறை சொல்வார்கள். பல் முனை தாக்குதல்களுக்கு பதில் சொல்ல கடமை பட்டவன் நான். ஒரு பக்கம் திமுக தலைவர் மறு பக்கம் தமிழ்நாடு முதல்வர். மத்தளத்திற்கு இரண்டும் பக்கம் அடி என்பது போல் உள்ளது எனது நிலைமை. இத்தகைய சூழலில் உள்ள என்னை மேலும் துன்பப்படுத்தும் வகையில் மூத்தவர்கள் ,அமைச்சர்கள் நடந்து கொண்டால் நான் யாரிடம் கூறுவது.

உங்களின் ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கப்படுகிறது. நாம் பயன்படுத்தும் சொல் மிக மிக முக்கியமானது. மிக மிக எச்சரிக்கையாக பேசுங்கள். நீங்கள் சொன்னத்தை வெட்டி, ஓட்டி பரப்புவார்கள். இது தான் எதிரிகளின் நோக்கம்.

இது முக்கியமான கால கட்டம். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டு உள்ளது. யாரும் மெத்தனமாக இருக்க கூடாது. 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும். சட்டமன்ற தேர்தலுக்கு இது தான் அடித்தளம் என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com