தலைநகர் டெல்லியில் பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என்று கெஜ்ரிவாலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். அது சிவகாசியை சுற்றியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளதால், அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்ய அனுமதிக்க அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதல்வர் ஸ்டாலின் புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் காற்று மாசுவின் அளவு கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனை காரணம் காட்டி தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய டெல்லி அரசு தடை செய்துள்ளது. பட்டாசு உற்பத்தியை பிரதான தொழிலாக கொண்டு செயல்படும் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் இதனால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
"வேறு எந்த மாநிலத்திலும் பட்டாசுக்கு முழுத் தடை விதிக்கவில்லை என்றும் , இதற்கு அனுமதி கிடைத்தால் சிவகாசியைச் சுற்றியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் செயல் என்றும் , குறிப்பாக இந்தத் தொழிலை நம்பி வாழும் கிராமப்புறப் பெண்களின் ஆண்டுத் தொழிலில் 70% தீபாவளிப் பண்டிகைக்கான பட்டாசு தொழில்.
எனவே பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கக் கூடாது என டெல்லி முதலமைச்சரை வலியுறுத்திய திரு.ஸ்டாலின், உச்ச நீதிமன்றம் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
பண்டிகை காலங்களில் இரண்டு மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதிக்கலாம் என்றும் ." சுற்றுச்சூழலுக்கு உகந்த நாடுகளில் கூட கொண்டாட்டத்தின் அடையாளமாக பட்டாசுகளை வெடிப்பது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகும்," என்றும் அவர் வாதிட்டார்.
இந்திய நகரங்களில் காற்று மாசுபாட்டிற்குப் பங்களிக்கும் காரணிகளாக வாகனங்கள் மற்றும் தொழில்துறை உமிழ்வுகள் இருக்கின்றன எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் , ஒருசில நாட்களுக்குப் பயன்படுத்தப்படும் பட்டாசுகளால் மிகக்குறைந்த அளவிலான மாசு ஏற்படும் என்பதால், பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுவோரின் வாழ்வாதாரத்தினைக் கருத்தில்கொண்டு, உரிமம் பெற்ற வணிகர்கள் மூலம் அறிவியல் முறைப்படி உருவாக்கப்பட்ட பசுமைப் பட்டாசுகளை விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்று தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.