ஆன்லைன் சூதாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கான சட்ட அதிகாரம் மாநில அரசுகளுக்கு உள்ளது! அனுராக் சிங் தாக்கூர் பதில் !

ஆன்லைன் விளையாட்டு
ஆன்லைன் விளையாட்டு

ஆன்லைன் கேமிங் தடை சட்டத்தை கொண்டு வருவதற்கான அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு இந்திய அரசியலமைப்பு வழங்கியிருப்பதாக மக்களவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி எழுப்பிய கேள்விக்கு தமது எழுத்து பூர்வ பதிலில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

சேலம் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.ஆர்.பார்த்திபன், மன உளைச்சலை அதிகரிக்கும் ஆன்லைன் விளையாட்டுகளை திறன் சார்ந்த விளையாட்டுகள் மற்றும் அதிர்ஷ்டத்தை சார்ந்த விளையாடுகள் நெறிமுறைப்படுத்த மேற்கொள்ளப் பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

Online Rummy
Online Rummy

தற்போது ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு சட்ட குறித்த கேள்விகளுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், " அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் இரண்டாவது பட்டியலில் (மாநிலப் பட்டியல்) 34-ஆவதாக ‘‘பந்தயம் கட்டுதல் மற்றும் சூதாடுதல்’’ இடம் பெற்றுள்ளது. இதில், மாநில அரசுகள் சட்டமியற்றும் அதிகாரம் உண்டு. அதற்கேற்ப, இணைய வழியில் கிடைக்கும் சூதாட்டங்களுக்கும் பல்வேறு மாநில அரசுகள் சட்டமியற்றி தடை விதித்துள்ளன" என்று தெரிவித்தார்.

ஆன்லைன் சூதாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கான சட்ட அதிகாரம் மாநில அரசுகளுக்கு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதையடுத்து ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு சட்ட ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ஆன்லைன், சூதாட்டத்தை தடுக்கும் சட்டத்தை மாநில அரசுகள் நிறைவேற்றினாலும், அவற்றின் அமலாக்கத்தை ஒழுங்குபடுத்தும் துறையாக மத்திய மின்னணு தகவல் தொழில் நுட்பத் துறை இருக்கும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தமது பதிலில் குறிப்பிட்டுள்ளார் என்பேது குறிப்பிடத் தக்கது.

.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com