ஏற்றத்தில் பங்குச்சந்தை ...எகிறிய சென்செக்ஸ் ! பட்ஜெட் எதிரொலி !

ஏற்றத்தில் பங்குச்சந்தை ...எகிறிய சென்செக்ஸ் ! பட்ஜெட் எதிரொலி !

இன்னும் சில மணி துளிகளில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2023ஐ தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக நடுத்தர மக்களுக்கும், கீழ்தட்டு மக்களுக்கு பயனுள்ள வகையில் அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது.

பட்ஜெட் வெளியாவதின் எதிரொலியாக இன்று இந்திய பங்கு சந்தையானது நல்ல ஏற்றத்தில் காணப்படுகின்றது. குறிப்பாக சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றது. இந்த பட்ஜெட்டில் பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் விதமாக பல சாதகமான அறிவிப்புகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக ரூபாயின் மதிப்பு ஏற்றத்தில் காணப்படுகின்றது. இந்திய ரூபாயின் மதிப்பு 15 பைசா அதிகரித்து, 81.77 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த அமர்வில் 81.92 ரூபாயாக முடிவுற்று காணப்பட்டது.

10.30 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 436.88 புள்ளிகள் அதிகரித்து, 59,986.73 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகின்றது. இதே நிப்டியும் 121.45 புள்ளிகள் அதிகரித்து, 17,783.60 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகின்றது. இன்றைய வர்த்தக அமர்வில் பி எஸ் இ ஆயில் & கேஸ் தவிர மற்ற அனைத்து குறியீடுகளுமே ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது.

குறிப்பாக சென்செக்ஸ் இன்று தொடக்கத்திலேயே 457.32 புள்ளிகள் அதிகரித்து, 60,007.22 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகின்றது. இதே நிப்டியும் 130.60 புள்ளிகள் அதிகரித்து, 17,792 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகின்றது. இதில் 1593 பங்குகள் ஏற்றத்திலும், 382 பங்குகள் சரிவிலும், 110 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் முழு நிதியாண்டுக்கான கடைசி பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com