வீடியோ கேம் விளையாடிய மகனுக்கு தந்தை கொடுத்த விநோத தண்டனை!

வீடியோ கேம் விளையாடிய மகனுக்கு தந்தை கொடுத்த விநோத தண்டனை!
Published on

ஜினிகாந்த் நடித்த ஒரு படத்தில் சுருட்டு புகைக்கும் அவரைத் திருத்த அவரது தந்தை ஒரு அறையில் அவரை அடைத்து வைத்து, அந்த அறை முழுவதும் சுருட்டை அடுக்கி வைத்து ஒரு நாளுக்குள் அத்தனை சுருட்டையும் புகைத்துத் தீர்த்துவிட வேண்டும் என்று கூறுவார். அத்தனை சுருட்டையும் புகைத்து முடிப்பதற்குள் ரஜினிக்கு இனி சுருட்டு புகைக்க வேண்டும் என்ற ஆசையே போய்விடும். அதைப்போலவே, செல்போனில் வீடியோ கேம் விளையாடும் தனது மகனை திருத்த ஒரு தந்தை அவனுக்குக் கொடுத்த தண்டனையும் உள்ளது.

தற்காலங்களில் குழந்தைகளிடையே செல்போனில் பல மணி நேரம் வீடியோ கேம் விளையாடும் வழக்கம் வெகுவாகப் பரவி உள்ளது. செல் போன்களில் ஒரு கேமை விளையாடும் சிறுவர்கள், கூடிய விரைவிலேயே அதற்கு அடிமையாகிப் போகின்றனர். அதன் விளைவு, நாளடைவில் பெற்றோருக்குத் தெரியாமல், அனைவரும் தூங்கிய பிறகு செல்போனை பயன்படுத்தும் நிலைக்கு வந்து விடுகின்றனர். இப்படி தனது மகன், இரவு நேரத்தில் வீடியோ கேம் விளையாடியதற்காக, தந்தை ஒருவர் அவனுக்குக் கொடுத்த தண்டனை பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

சீனாவின் ஷென்சென் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன், இரவு 1 மணிக்கு மேல் யாருக்கும் தெரியாமல் தனது படுக்கையில், செல்போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டு இருந்ததை அவன் தந்தை தெரிந்துகொண்டு, அவனுக்குப் பாடம் கற்பிக்க முடிவு செய்தார். அதைத் தொடர்ந்து அதிக நேரம் ஸ்மார்ட் போன் திரையைப் பார்ப்பதால் உண்டாகும் விளைவுகள் என்னென்ன என்பதைப் புரிய வைக்க, தனது மகனை இரவு முழுக்க தூங்க விடாமல் தொடர்ந்து வீடியோ கேம் விளையாட வைத்திருக்கிறார். இந்த விளையாட்டு ஒரு மணி நேரம், இரண்டு மணிநேரம் அல்ல, சுமார் 17 மணி நேரம் தனது மகனை வீடியோ கேம் விளையாட வைத்திருக்கிறார். அவரது மகன் தன்னால் முடியவில்லை என்று கூறியும், விடாமல் அவனை விளையாட அந்த வீடியோ கேமை விளையாட வைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த பையன் தன்னால் முடியாமல் வாந்தி எடுத்து இருக்கிறான். அதன் பிறகே அவனது தண்டனையை நிறுத்தி இருக்கிறார் அந்த தந்தை. இந்த நிகழ்வுகள் அனைத்தையும் பதிவு செய்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவும் செய்திருக்கிறார்.

மன்னிப்பு கேட்டும் மகனை விடவில்லை. இறுதியாக, முடியாமல் போய் மகன் வாந்தி எடுத்த பிறகே, அவனது தண்டனையை முடித்திருக்கிறார். முக்கியமாக இந்த நிகழ்வுகள் அனைத்தையும் பதிவு செய்து, சீனாவின் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விநோத தண்டனை பெற்ற அவரது மகனும் தனது கம்ப்யூட்டரில் நீண்ட நேரம் விழித்திருந்து வீடியோ கேம் விளையாடியதற்காக மன்னிப்புக் கேட்டு குறிப்பு ஒன்றையும் எழுதி வைத்திருக்கிறான். அந்தக் குறிப்பில், “நள்ளிரவில் வீடியோ கேம் விளையாடுவதை எனது தந்தை கண்டுபிடித்து என்னை தண்டித்தார். எனக்கு வாந்தி வரும் வரை அந்த கேமை அவர் விளையாட வைத்தார். முடியாமல் நான் பல முறை எழுந்தேன். எப்படியும் நாள் முழுதும் இருக்கும். நள்ளிரவு 1 மணி முதல் மாலை 6 மணி வரை, தொடர்ந்து 17 மணி நேரம் அந்த கேமை விளையாடினேன். அதையடுத்து நான் தினமும் 11 மணிக்கு முன் படுக்கைக்குச் செல்வேன் என எனது தந்தைக்கு உறுதி அளித்திருக்கிறேன். இனி படுக்கைக்குச் செல்லும் முன்பு மொபைல் கேம் மற்றும் பொம்மைகளுடன் விளையாட மாட்டேன்'' எனவும் அவன் அந்தக் குறிப்பில் எழுதி இருக்கிறான். ஒரு தந்தை தனது மகனுக்குக் கொடுத்த இந்த கடுமையான தண்டனை, சமூக வலைதளங்களிடம் மாறுபட்ட விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com