சிவனுக்கு நண்டுகளை காணிக்கையாகச் செலுத்தும் விநோதக் கோயில்!

சிவனுக்கு நண்டுகளை காணிக்கையாகச் செலுத்தும் விநோதக் கோயில்!

ழக்கமாக இந்துக் கோயில்களில் கடவுளுக்கு காணிக்கையாக பால், பூக்கள், தேங்காய், பழங்கள், இனிப்புகள் போன்றவற்றை காணிக்கையாகப் படைப்பது என்பது வழக்கமாக இருக்கும். ஆனால், ஒரு கோயிலில் இறைவனுக்கு நண்டுகளைப் படைத்து வழிபடுகிறார்கள் என்பது மிகவும் ஆச்சர்யம்தான்.

எங்கே அந்த கோயில், குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ராம்நாத் சிவ் கேலா என்ற சிவன் கோவில் பிரசித்தி பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள சிவனுக்கு ஒவ்வொரு ஆண்டும் உயிருடன் இருக்கும் நண்டுகளை காணிக்கையாப் படைப்பது வழக்கமாம். ஆண்டுதோறும் ஜனவரி மாதம் மகர சங்கராந்தி நாளிலிருந்து தினமும் நண்டு பூஜை நடைபெறுகிறது..

இந்த வருடம் கடந்த ஞாயிறு முதல் சிவனுக்கு நண்டு களைக் காணிக்கையாக வழங்கத் தொடங்கியுள்ளனர். ஏராளமான பக்தர்கள் உயிருடன் இருக்கும் நண்டுகளைப் பிடித்து வந்து சிவனுக்கு காணிக்கையாக செலுத்தி வழிபாடு செய்து வருகின்றனர்.

இப்படிச் செய்வதால் உடலில் உள்ள நோய்கள் குணமாகும் என்பது பக்தர்களின் அசையா நம்பிக்கையாக உள்ளது. குறிப்பாக காது கேளாமை, காது வலி, செவித்திறன் குறைபாடு, போன்ற காது தொடர்பான நோய்கள் குணமாகும் என்று நம்புகிறார்கள்.

“இந்த கோவிலில் நண்டுகளைக் காணிக்கையாகச் செலுத்தி வழிபட்டால் தங்களின் அனைத்து விருப்பங் களும் நிறைவேறி, நல்வாழ்வு வாழலாம் என்று நம்புகின்றனர். இந்த கோயிலில் நண்டு அர்ச்சனை செய்தவர்களின் உடல்நலக் குறைபாடுகள் குணமான தாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். நானும் எனக்கு இருக்கும் நோய் குணமாகப் பிரார்த்தனை செய்யலாம் என்று வந்திருக்கிறேன்” என்று சொல்கிறார் கோயிலுக்கு வந்த ஒரு பக்தர்.

“இங்கு ஆண்டுக்கு ஒருமுறை நண்டு காணிக்கை செலுத்தப்படுகிறது. நண்டுகளைக் காணிக்கையாகச் செலுத்தி வழிபடுவதால் குழந்தைகளுக்கு காது வலி வராது என்று நம்புகிறோம்'' என்கிறார்கள் காணிக்கை செலுத்த வந்த பக்தர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com