சீனாவுடன் போருக்கு செல்லப் பரிந்துரைப்பேன் - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி

ட்விட்டரில் பர பர கருத்து!
சீனாவுடன் போருக்கு செல்லப் பரிந்துரைப்பேன் - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி
Picture from Twitter @Swamy39

பாஜகவில் இருந்துகொண்டே பாஜக அரசை அவ்வப்போது விமர்சனம் செய்யும் சுப்ரமணியன் சாமி இந்திய எல்லையில் அத்துமீற முயன்ற சீனாவிற்கு எப்படி பதிலடி கொடுப்பது என்று ஐடியா கொடுத்துள்ளார்.

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள தவங் பகுதியில் இந்தியா மற்றும் சீனா இருநாடுகளும் எல்லை பகுதியை வரையறுத்து ரோந்து வருவது வாடிக்கை. கடந்த வாரம் டிசம்பர் அன்று இந்திய வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட சமயத்தில் சீன வீரர்கள் எல்லையில் அத்துமீறியதைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனையில் இரு நாட்டு வீரர்களும் காயம் அடைந்தனர். பிறகு சீன வீரர்களை விரட்டியடித்த இந்தியப் படையினர் தொடர்ந்து எல்லையைக் கண்காணித்து வருகின்றனர்.

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சட்டத்திற்கு புறம்பாக சீனா ஆக்கிரமித்து உருவாக்க எண்ணிய புதிய பகுதிகளுக்காக எதிர்ப்பு தெரிவித்து அந்த மாநில பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பான படங்களை அருணாச்சல பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சி சார்பில் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது.

இதைப் பார்த்த சுப்பிரமணியன் சாமி தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில் ''இந்தியாவிற்குள் சீனா ஒரு கிராமத்தை உருவாக்கி உள்ளது என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. அப்படியென்றால் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் கைக்குலுக்கி சுமூகமான உறவில் இருப்பது யார்?'' என கேட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தூங்குவதாவும், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அவர் கைக்குலுக்கி நட்புறவில் இருப்பதாகவும் சுப்பிரமணியசாமி மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.

இன்னொரு ட்விட்டர் பதிவில், ''சீனாவின் ஆக்கிரமிப்பை பார்த்து இந்தியா உடன் போர் செய்யும் நாடு என சீனாவை ஏன் இன்னும் அறிவிக்கவில்லை? என்ற கேள்வி எழுகிறது. மேலும் தொடர்ந்து நாம் சீனாவுக்கு வெறும் அறிக்கை பதில் தான் கொடுத்து வருகிறோம். இதுதவிர சீனாவுக்கு நாம் மிகப் பெரிய அளவில் களத்தில் இறங்கி பதிலடி தர வேண்டும் . அதற்கான திறன் இந்தியாவிடம் உள்ளது. ஆனால் தைரியம்தான் இல்லை'' என கூறியுள்ளார்.

மற்றொரு ட்வீட்டில், ''இதுபோன்ற முக்கியமான விஷயங்களில் நான் பதவியில் இருந்தால் மட்டுமே வியூகத்தைப் பரிந்துரைக்க முடியும். போரிடுவதற்கான குறிக்கோள், நோக்கம் இருந்தால் இஸ்ரேல் ராணுவத்துடனும், அமெரிக்காவின் ஆயுத உதவிகளுடன் சீனாவுடன் போருக்குச் செல்ல பரிந்துரைப்பேன். அதோடு திபெத்தையும், தைவானையும் சுதந்திர நாடுகளாக இந்தியாவை அங்கீகரிக்குச் செய்து சீனாவை எச்சரிப்பேன் '' என பரபரப்பான கருத்துகளைப் பதிவிட்டுள்ளார் .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com