விவசாயிகளுக்கு மானிய விலையில் வாடகை இயந்திரம்!

விவசாயிகளுக்கு மானிய விலையில் வாடகை இயந்திரம்!

ருவநிலை மாற்றம், விளைச்சல் குறைவு, கூலி உயர்வு, புதுப்புது வகை நோய்களின் தாக்கம் என்று சிரமத்திற்கு மத்தியில் பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் மிகக்குறைந்த லாபத்தையே ஈட்டுகின்றனர். விவசாயத்திற்கு தேவையான இயந்திரங்களை தனியாரிடம் வாடகைக்கு பெறுவதன் மூலம் பெரும் பெருமளவிலான தொகை அதற்காக ஒதுக்க வேண்டி தேவை உள்ளது. இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்களை வழங்கி வருகிறது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்

இந்த நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் தற்போதைய விவசாய பணிக்கு தேவையான இயந்திரங்களை மானிய விலையில் வாடகைக்கு வழங்குவது சம்பந்தமான அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். உழவு இயந்திரம், டிராக்டர், ரோட்டர் வேட்டர், தென்னை மட்டையை துகளாக்கும் இயந்திரம், ரிவர்சிபிள் மோல்ட் கலப்பை, சோளம் அறுவடை இயந்திரம், வைக்கோல் கட்டும் இயந்திரம் போன்ற பல்வேறு வகையான உணவு இயந்திரங்களை 50% சிறு குறு விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும்.

இவற்றை ஒரு ஏக்கர் நிலத்திற்கு 1 மணி நேரம் என்று கணக்கிலோ அல்லது அதிகபட்சமாக 5 மணி நேரம் அல்லது 5 ஏக்கர் என்ற கணக்கிலோ வாங்கி பயன்படுத்தலாம் என்றும், ஈர நிலத்திற்கு கூடுதல் மானியம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த இயந்திர கருவிகள் தேவைப்படுவோர் சிறு குரு விவசாய சான்றிதழ், பட்டா, சிட்டா அடங்கல் ஆகியவற்றை இ.வாடகை செயலி மூலம் முன்பதிவு செய்து முன்பணம் செலுத்தி பயன்பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com